AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Special Summary Revision Electoral Rolls : தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் எப்போது தொடங்கும் என்பன உள்ளிட்ட முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
SIR - மாதிரிப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Oct 2026 20:24 PM IST

தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், உத்தரபிரதேசம். உத்தரகண்ட். பஞ்சாப். மணிப்பூர். கோவா. தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க விருத்தம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின்படி 1950- ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 21- ஆம் பிரிவின் கீழ் 2027 ஜனவரி 1- ஆம் தேதியே தகுதியாக கொண்டு 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தை நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தமானது

மேலும் படிக்க: அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறும் மாநிலங்கள்

  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
  • அசாம்.
  • .பீகார்.
  • சத்தீஸ்கர்.
  • குஜராத்.
  • கேரளம்.
  • லட்சத்தீவுகள்.
  • மத்திய பிரதேசம்.
  • மணிப்பூர்.
  • புதுச்சேரி.
  • பஞ்சாப்.
  • ராஜஸ்தான்.
  • தமிழ்நாடு.
  • உத்தர பிரதேசம்.
  • உத்தரகாண்ட்.
  • மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களில் நடைபெற உள்ளது.

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறும் நாள்கள்

                        சிறப்பு சுருக்க திருத்த விவரம்                                          நாள்கள்
வாக்குச்சாவடிகளை முறைப்படுத்துதல், மறு சீரமைப்பு                                          2.11.2026
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்களை வெளியிடுதல்                                          2.11.2026
உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு                           2.11.2026 முதல் 11.12.2026 வரை
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளின் தீர்வு                                       28.12.2026 க்குள்.
வாக்காளர் பட்டியல்களின் இறுதி வெளியீடு                                          4.01.2027.

மறு ஆய்வுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிப்பு

வாக்காளர் சிறப்பு தீவிர மறு ஆய்வு நடைபெற்று வரும் அல்லது அண்மையில் நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில பாதுகாப்பு மறு ஆய்வுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர மறு ஆய்வு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில், சிறப்பு தகவல் மறு ஆய்வின் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குள்படுத்தியதுடன், தேர்தல் ஆணையத்தின் பதிவுகளை வெளியிட வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.

Whatsapp Image 2026 10 15 At 7.46.01 Pm

சிறப்பு சுருக்க திருத்த அறிவிப்பு.

மாநிலங்களில் மறு ஆய்வு பணியை நிறுத்த வலியுறுத்தல்

தன்னிச்சையான நீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் பெயர்களை மீட்டெடுப்பதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். மேலும், மறு ஆய்வு செயல்முறைக்கு நீதித்துறை தணிக்கை நடத்த வேண்டும் என்றும், தீர்ப்பு வரும் வரை மாநிலங்கள் முழுவதும் இந்த மறு ஆய்வு பணியின் இடைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். முன்னதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சிறப்பு தகவல் மறு ஆய்வின் செயல்முறை குறித்த தங்களது சந்தேகங்களை எழுப்புவதற்கும், தலைமை தேர்தல் ஆணையர் நானே குமார் பதவி விலகக் கூறுவதற்கும் தலைமை நீதிபதி சூரியகாந்தை சந்திக்க நேரம் கோரியிருந்தனர். இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் – அமைச்சரவையில் மாற்றமா?

Follow Us