AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆயுத பூஜை தொடர் விடுமுறை… சொந்த ஊர் செல்லும் பொதுமக்களே நோட் திஸ்.. 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Ayudha Puja Special Buses : ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து இன்று 2, 194 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் எங்கெங்கு இருந்து புறப்படும் என்ற தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது .

ஆயுத பூஜை தொடர் விடுமுறை… சொந்த ஊர் செல்லும் பொதுமக்களே நோட் திஸ்.. 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Oct 2026 16:46 PM IST

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 19, 20- ஆம் தேதிகளில் ( திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதற்காக, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதற்கு ஏதுவாக 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்தில் 1.25 லட்சம் பயணிகள் பயணம்

தற்போது, இந்த விடுமுறைக்காக நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நேற்று வியாழக்கிழமை 755 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அதில், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொது மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகள்

மேலும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

  • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்.
  • கோயம்பேடு பேருந்து நிலையம்.
  • காலநிலை பூங்கா தற்காலிக பேருந்து நிலையம்.
  • மாதவரம் பேருந்து நிலையம்.
  • மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்.

சிறப்பு ரயில்களிலும் அதிகரித்த மக்கள் கூட்டம்

ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களின் போது தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து இருந்தனர். குறிப்பாக 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ததால் பெரும்பாலானோருக்கு ரயிலில் இடம் கிடைக்கவில்லை. இதனால், ரயிலிலும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

சொந்த ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்

இதே போல, சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் விஜயதசமி தொடர் விடுமுறை முடிவடைந்து மீண்டும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இதே போல, தெற்கு ரயில்வே சார்பிலும் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”

Follow Us