ஒரே லாட்டரி நிறுவனம்.. திமுக- அதிமுக பெற்ற ரூ. 260 கோடி நன்கொடை.. அதிரவைக்கும் பின்னணி!
DMK- AIADMK Received Donation From Lottery Firm : கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக மற்றும் அதிமுக இணைந்து ரூ. 260 கோடி நன்கொடையாக பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. முழு விவரம் உள்ளே.
நாட்டில் உள்ள பல்வேறு அரசியில் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளிட்டோர் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு நன்கொடைகள் பெறும் அரசியல் கட்சிகள் இது தொடர்பான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, தனியார்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதில், திராவிட முன்னேற்ற கழகத்துக்கு லாட்டரி நிறுவனம் சார்பில் ரூ.125 கோடியும், அதிமுகவுக்கு அதே நிறுவனம் ரூ. 135 கோடி என மொத்தம் ரூ. 260 கோடி நன்கொடை வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ரூ. 125 கோடி நன்கொடை
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட டைகர் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் கடந்த 2025- 2026- ஆம் நிதி ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ரூ. 125 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளது. இந்த லாட்டரி நிறுவனத்தின் தலைவராக சுபயன் நாகராஜன் இருந்து வருகிறார். இவரும், கோயம்புத்தூரை சேர்ந்த தமிழக லாட்டரி அதிபர் சாண்டியாகோ மாட்டினும் ( லாட்டரி அதிபர் மார்ட்டின்) நெருங்கிய கூட்டாளிகள் ஆவர்.
மேலும் படிக்க: சி.வி சண்முகத்துக்கு பேரிடி.. ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!




அதிமுகவுக்கு ரூ. 135 கோடி நன்கொடை
லாட்டரி அதிபர் மார்ட்டினும், டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்தின் தலைவர் சுபயன் நாகராஜனும் மற்றொரு நாட்டின் நிறுவனத்தில் கூட்டாளிகளாக இருந்து வருகின்றனர். டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து திமுகவை போல, அதிமுகவும் கடந்த 2025- 2026 ஆம் நிதி ஆண்டில் ரூ. 135 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே லாட்டரி நிறுவனத்திடம் இருந்த திமுக மற்றும் அதிமுகவும் மொத்தமாக ரூ. 260 கோடி நன்கொடை பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ. 260 கோடி நன்கொடை
கடந்த 2025- 2026- ஆம் நிதி ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஒட்டுமொத்தமாக ரூ. 191 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதே ஆண்டில் அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் மொத்தமாக ரூ. 161 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதே போல, கடந்த 2024- 2025- ஆம் நிதி ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஒட்டுமொத்தமாக ரூ. 365 கோடி நன்கொடை பெற்ற நிலையில், 2025- 2026- ஆம் நிதி ஆண்டில் பெறப்பட்ட நன்கொடை ரூ. 191 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அன்னாசி பழத்தை உருட்டிவிட்ட முதல்வர் விஜய்.. பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.. என்ன அது!