AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கரூர் – கோவை 6 வழிச்சாலை.. தாமதத்துக்கான காரணம் என்ன.. பொதுமக்களின் கோரிக்கைகள் என்ன!

Karur To Coimbatore 6 Lane Project : கரூர் முதல் கோயம்புத்தூர் இடையிலான 6 வழிச்சாலை திட்டத்தில் உள் ள தாமதங்கள் மற்றும் இரு மாவட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

கரூர் – கோவை 6 வழிச்சாலை.. தாமதத்துக்கான காரணம் என்ன.. பொதுமக்களின் கோரிக்கைகள் என்ன!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Oct 2026 15:25 PM IST

தமிழகத்தில் தொழில் நகரங்கள் மற்றும் மத்திய, மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய உள் கட்டமைப்பு திட்டங்களில் கரூர் முதல் கோயம்புத்தூர் வரையிலான 6 வழி சாலை திட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், சரக்கு போக்குவரத்தை விரைவு படுத்தவும் கரூர்- கோவை இடையிலான சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஜோசப் விஜய் முன் வைத்த உள்கட்டமைப்பு கோரிக்கைகளில் கரூர்- கோவை 6 வழிச்சாலை திட்டம் இடம் பெற்றுள்ளது.

தமிழக பொருளாதார நாடிகளில் ஒன்றான 6 வழிச்சாலை

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில், கொங்கு மண்டலத்தின் தொழில் நகரங்களாக விளங்கி வரும் திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களை இணைப்பதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார நாடிகளில் ஒன்றாகவும் விளங்கும். அத்துடன் சென்னை மற்றும் திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த சாலையை சார்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக கரூர்- கோவை நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

கரூர்-கோவை 6 வழிச்சாலை சாத்தியக்கூறு அறிக்கை

அத்துடன், போக்குவரத்து நெரிசல் காரணமாக கரூர் முதல் கோயம்புத்தூர் வரையிலான பயண நேரம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களையும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பெரும் சிரமத்தை மேற்கொண்டு வருகிறது. கரூர் டூ கோயம்புத்தூர் இடையிலான விரைவு சாலை மற்றும் வழித்தட விரிவாக்க பணிகள் குறித்த சாத்திய கூறு அறிக்கைகள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்கான சாத்திய கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தனியார் நிறுவனங்கள் மூலமாக தயார் செய்யப்பட்டு தமிழக அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் திட்டம்

ஆனால், அது பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து வருகிறது. இது போன்ற பெரிய அளவிலான திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துதல், உயர்மட்ட மேம்பாலம் மற்றும் புறவழிச் சாலை அமைப்பது தொடர்பான பணிகளும் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த கோரிக்கையை பரிசீலித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”

Follow Us