AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட இவர தெரியலை.. இவருதான் எஸ்.ஐ.யை தாக்கிய இளைஞர்.. மீண்டும் பெண் காவலரை தாக்கிய சம்பவத்தில் அதிரடி கைது!

Thanjavur Youth Arrested Assaulting Police : தஞ்சாவூரில் ரயிலில் பணியில் இருந்த பெண் காவலரை தாக்கிய இளைஞரை ரயில்வே இருப்பு பாதை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர், ஏற்கெனவே காவல் உதவி ஆய்வாளரை தாக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது .

அட இவர தெரியலை.. இவருதான் எஸ்.ஐ.யை தாக்கிய இளைஞர்.. மீண்டும் பெண் காவலரை தாக்கிய சம்பவத்தில் அதிரடி கைது!
கைதான இளைஞர் ஆகாஷ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Oct 2026 19:26 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் ( 26 வயது). இவர், இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 16- ஆம் தேதி) சென்னை டு திருச்செந்தூர் அதிவிரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, ரயிலில் அதிக கூட்ட நெரிசல் இருந்ததன் காரணமாக இளைஞர் ஆகாஷ் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர் கவிதா என்பவர், ஆகாசை ரயிலின் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதில், ஆத்திரம் அடைந்த இளைஞர் ஆகாஷ், அந்த பெண் காவலர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் பெண் காவலரின் செல்போனை பறித்த ஆகாஷ் அதனை கீழே போட்டு உடைத்து நொறுக்கி உள்ளார்.

பெண் காவலர் செல்போனை உடைத்து தாக்குதல்

அத்துடன் அந்தப் பெண் காவலர் கவிதாவை ஆகாஷ் தாக்கி உள்ளார். உடனே, சக பயணிகள் இளைஞர் ஆகாசை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து பெண் காவலர் கவிதாவை மீட்டனர். இந்த தாக்குதலில் பெண் காவலர் கவிதாவுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் கவிதா ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: ஆயுத பூஜை தொடர் விடுமுறை… சொந்த ஊர் செல்லும் பொதுமக்களே நோட் திஸ்.. 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

காவலரை தாக்கிய இளைஞர் அதிரடி கைது

அந்த புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது, காவலர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர் ஆகாசை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியல் போராட்டத்தில் காவல் உதவி ஆய்வாளரை பொதுவெளியில் ஆகாஷ் தாக்கிய சம்பவம் தெரிய வந்தது.

விசிக சாலை மறியலில் எஸ்ஐயை தாக்கிய இளைஞர்

அத்துடன், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். ரயிலில் படியில் நின்று கொண்டு பயணம் செய்த இளைஞர், பெண் காவலரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அனுமதிக்கான தடை தகர்ந்தது.. தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Follow Us