AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Varanasi: பிருத்விராஜ் சுகுமாரனின் பர்த்டே.. வாரணாசி பட ஷூட்டிங் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து சொன்ன எஸ்.எஸ்.ராஜமௌலி!

Prithviraj Sukumaran Birthday: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரின் இயக்கத்தில் தற்போது வாரணாசி என்ற பிரம்மாண்டமான படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், வாரணாசி பட ஷூட்டிங் போட்டோவை பகிர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி வாழ்த்தியுள்ளார்.

Varanasi: பிருத்விராஜ் சுகுமாரனின் பர்த்டே.. வாரணாசி பட ஷூட்டிங் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து சொன்ன எஸ்.எஸ்.ராஜமௌலி!
பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2026 17:15 PM IST

மலையாளம் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்தி மொழியிலும் படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கிறார். தற்போது மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இறுதியாக இவரின் நடிப்பில் கலீஃபா (Khalifa) என்ற திரைப்படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் தெலுங்கில் நடித்துவரும் புதிய படம்தான் வாரணாசி (Varanasi). நடிகர் மகேஷ் பாபு (Mahesh Babu) ஹீரோவாக இப்படத்தில் நடித்துவரும் நிலையில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (S. S. Rajamouli) இதை மிக பிரம்மாண்டமாக இயக்கிவருகிறார்.

இதில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் “கும்பா” என்ற வில்லன் வேடத்தில் நடித்துவருகிறார். இன்று (16/0/2026) நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தனது 44வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, வாரணாசி பாட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குற்றப் பின்னணி.. தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி:

இந்த வாரணாசி திரைப்படமானது ஹாலிவுட் படம்போலவே மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் நடிகர் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க, அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படமானது ஜங்கிள் மற்றும் அறிவியல் புனைகதைகளை மையப்படுத்தி இயக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான படமாகும். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: மனிதகுலத்தின் மாபெரும் கதை… இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ராமாயணா படத்தின் நியூ ட்ரெய்லர்!

அந்த விதத்தில் இப்படமானது மிகவும் தரமாக சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இந்த படத்தை வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியில் உலகமெங்கும், பல்வேறு மொழிகளில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us