AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om Movie: குற்றப் பின்னணி.. தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

OM Movie Plot: தென்னிந்திய சினிமாவில் மக்கள் கொண்டாடும் நடிகராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் 55வது திரைப்படமாக மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் ஓம். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்து இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Om Movie: குற்றப் பின்னணி.. தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
தனுஷின் ஓம் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2026 15:32 PM IST

கோலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஹிட் திரைப்படங்களை கொடுத்துவருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கர (Kara). கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இப்படமானது வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தனுஷ் நடித்துவந்த 55வது திரைப்படம்தான் ஓம் (Om). இந்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கிவரும் நிலையில், தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கிவருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது 2026ம் ஆண்டு நவம்பர் இறுதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரும் – நெல்சன் சாரும் கல்லூரி நண்பர்கள் போல இருப்பார்கள்… நடிகை மிர்னா மேனன்

தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா?:

நடிகர் தனுஷின் 55வது திரைப்படமாக இந்த ஓம் : சாப்டர் 1 உத்திரம் என்ற திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் இதில் மம்முட்டி மற்றும் சாய் பல்லவி மிகவும் முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் கதைக்களம் என்னவென்றால், இந்த ஓம் படமானது உண்மைக் குற்றப் பின்னணியில் அமைந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான படமாகும்.

இதையும் படிங்க: அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர் ஓபன் டாக்

இது நட்பைப் பற்றியது, மேலும் இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டும் கட்டுப்படாத, உலகளாவிய ஒரு திரைப்படமாகும். இது சில நிஜ சம்பவங்களால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், இதன் கதைக்களம் ஒரு கற்பனை உலகில் அமைக்கப்பட்டுள்ளது, அந்த உலகம் கேங்ஸ்டர்ஸ் மற்றும் யதார்த்தமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷின் ஓம் திரைப்பட கதை குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இந்த ஓம் படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (16/10/2026) உலகமெங்கும் வெளியாகியிருக்கவேண்டும். ஆனால் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த விதத்தில் தனுஷிற்கு இந்த படமானது வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us