AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அவினாஷ் மற்றும் ஜேசனிடையே மோதல்.. மிரட்டி சென்ற ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

Bigg Boss Tamil 10: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அவினாஷ் அசோக் மற்றும் ஜேசன் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அவினாஷ் மற்றும் ஜேசனிடையே மோதல்.. மிரட்டி சென்ற ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
அவினாஷ் அசோக் மற்றும் ஜேசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2026 10:32 AM IST

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்த்தியானது தமிழில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Antony) தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் (16/10/2026) கிட்டத்தட்ட 40 நாட்களாகியுள்ளது. அந்த விதத்தில் வெவ்வேறு டாஸ்குகளுடன் சுவாரஸ்யமாக நடைபெற்றுவருகிறது.

அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் இருந்துவருகிறார். இதில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜேசன் மற்றும் அவினாஷ் அசோக் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரும் – நெல்சன் சாரும் கல்லூரி நண்பர்கள் போல இருப்பார்கள்… நடிகை மிர்னா மேனன்

பிக் பாஸில் அவினாஷ் அசோக் மற்றும் ஜேசன் இடையே மோதல்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. அந்த விதத்தில் இன்று (16/10/2026) வெளியான முதல் ப்ரோமோவில் அவினாஷ் அசோக் மற்றும் ஜேசன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜேசன் அஷ்மிதாவிடம், தனது பெட்-ல் யாரும் எற கூடாது, அவ்வாறு ஏறினால் நடப்பதே வேறு என மிரட்டுவதுபோல பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் அசோக், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர் ஓபன் டாக்

உடனே ஜேசன் எனது பெட்-ல் இருந்து எதையாவது எடுத்து பார் நடப்பதே வேறு என கூறினார். உடனே அவினாஷ், ஜேசன் கட்டிலில் இருந்த அவரின் துணியை தூக்கி வீசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசன், அவினாஷை மிரட்டியிருந்தார். இதையே நீங்க வீட்டில் வெளியே வைத்து செய்திருந்தால், நடப்பதே வேறு என மிரட்டும் பாணியில் பேசியிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 40வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மற்ற சீசன்களை ஒப்பிட்டும்போது விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்றுவருகிறது. டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் 10.0 போன்ற டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் அடுத்தடுத்த போட்டியாளர்களிடையே மோதல்களும் நிலவும் நிலையில், சுவாரஸ்யமாக மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us