AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர் ஓபன் டாக்

OM Chapter 1 Update | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் 1. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரத்தா அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியபோது ஓம் படத்தின் பெருமைக்குரிய விசயங்கள் என சிலவற்றை வெளிப்படையாக பேசியுள்ளார்.

அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர் ஓபன் டாக்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Oct 2026 06:35 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் 1. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து அடுத்ததாக வெளியாக உள்ள இந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ள நிலையில் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா என இரண்டு நாயகிகள் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்தப் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர்:

ஒரு தயாரிப்பாளராக மக்கள், திரையுலகினர் மற்றும் பார்வையாளர்களை ஒரு பரந்த அளவில் ஒன்றிணைக்கும் திரைப்படங்களை உருவாக்குவதே எங்களின் நோக்கமாக இருந்து வருகிறது. ஓம் சாப்டர் 1 படத்திற்காக தனுஷ் சாரையும் மம்மூட்டி சாரையும் ஒன்றிணைப்பது, ஆர் டேக் ஸ்டுடியோஸுக்கு ஒரு பெருமைக்குரிய மற்றும் மிகவும் சிறப்பான தருணமாகும். இருவரும் மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட அசாதாரண கலைஞர்கள்.

மேலும் இந்த இரண்டு ஆற்றல் மிக்க கலைஞர்களும் திரையைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தை உருவாக்குவது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது. இந்த கூட்டணியின் பிரம்மாண்டம், உணர்ச்சி மற்றும் கம்பீரத்தை பார்வையாளர்கள் திரையரங்குகளில் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் இந்த ஒன்றிணைப்பு உண்மையிலேயே மறக்க முடியாததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தயாரிப்பாளர் ஸ்ரத்தா அகர்வால் தெரிவித்துள்ளார்.

Also Read… பிக்பாஸில் திருடுபோன வைரம்… சந்தேகத்தின் வலையில் சிக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியைப் பார்த்த ஓஜி ஃபேன் பாய் தனுஷ் – வைரலாகும் போட்டோஸ்!

Follow Us