AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரஜினிகாந்த் தனது சொந்த சாதனைகளை அவரே முறியடிக்கிறார் – எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

SJ Suryah talks about Superstar Rajinikanth | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு குறித்தும் அவரது சாதனைகள் குறித்தும் பேட்டி ஒன்றில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் தனது சொந்த சாதனைகளை அவரே முறியடிக்கிறார் – எஸ்.ஜே.சூர்யா புகழாரம்
எஸ்.ஜே.சூர்யா - ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 17:20 PM IST

தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தனது கடின உழைப்பை செலுத்தி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு இயக்குநராக தனது பெயரை ரசிகர்களிடையே பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தை தொடர்ந்து இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா பிறகு தனது படங்களை அவரே இயக்கி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து சினிமாவில் நாயாகன், வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என பண்முகத்தன்மை கொண்ட கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக அதிக அளவில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக ஜெயிலர் 2 படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் தனது சொந்த சாதனைகளை அவரே முறியடிக்கிறார்:

அதன்படி எஸ்.ஜே.சூர்யா பேட்டி ஒன்றில் பேசியதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியதோடு, தொடர்ந்து தனது சொந்த சாதனைகளையும் முறியடித்து வருகிறார். அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் மற்றும் சூப்பர் ஸ்டார். அவருக்கு அருகில் அமர்ந்து அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு நாள், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புத் தளத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் என்னிடம், சூர்யா, என் நடிப்பு எப்படி இருந்தது? என்று கேட்டார் அதற்கு நான், “சூப்பர் சார் என்று பதிலளித்தேன். பின்னர் அவர் நெல்சன் சாரிடம் சென்று, அதே காட்சியை அவருக்காக நடித்துக் காட்டினார்.

 Also Read… Karthik Subbaraj: டோரதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி-யின் தவறான கருத்து.. வன்மையாக கண்டித்த கார்த்திக் சுப்பராஜ்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

 Also Read… பயம்… அதனால் தான் ரஜினிகாந்தின் அந்தப் படத்திற்கு நோ சொன்னேன் – நடிகை மீனா!

Follow Us