பயம்… அதனால் தான் ரஜினிகாந்தின் அந்தப் படத்திற்கு நோ சொன்னேன் – நடிகை மீனா!
Actress Meena talks about Rajinikanth movie | தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கி பிறகு நாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தவர் நடிகை மீனா. இவர் நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1982-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நெஞ்சங்கள். இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை மீனா. அதனைத் தொடர்ந்து கடந்த 1986-ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்தார் நடிகை மீனா. அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் உடன் நடித்த நடிகை மீனா பிந்தைய காலத்தில் அவருக்கு ஜோடியாகவே பலப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 1990-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக தனது பயணத்தை தொடங்கினார் மீனா.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகியாக நடித்து வந்த போது நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நடிக்க மறுத்தது குறித்து நடிகை மீனா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பயம்… அதனால் தான் ரஜினிகாந்தின் அந்தப் படத்திற்கு நோ சொன்னேன்:
அதன்படி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் படையப்பா. இந்தப் படத்தில் நடிகை சௌந்தர்யா நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீலாம்படி என்ற மாஸான வில்லி வேடத்தில் நடித்து இருந்தார். ஒரு ஸைலிஸான வில்லியாக தற்போதும் அந்த கதாப்பாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Also Read… இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி யார் தெரியுமா? இவர் பான் இந்திய பிரபல நடிகை!
இந்த நிலையில் முன்னதாக நடிகை மீனா அளித்தப் பேட்டி ஒன்றில் நீலாம்பரி வேடத்தில் நடிக்க தனக்கு முதலில் வாய்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தான் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நிலையில் நெகட்டிவ் ஷேடில் நடித்தால் நாயகி பிம்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் அதனை ஏற்க மறுத்துவிட்டேன். ஆனால் தற்போது அந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… யார் இந்த வீட்டில் சிறந்த திருடர்… பிக்பாஸில் இந்த வாரம் டைமண்ட் ஹைஸ்ட் டாஸ்க் – வைரலாகும் வீடியோ!