AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம்? வைரலாகும் தகவல்

Harish Kalyans Dashamakan movie faces censor hurdles | தமிழ் சினிமாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தாஷமக்கான். இந்தப் படம் தற்போது சென்சார் பிரச்சனையில் சிக்கியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம்? வைரலாகும் தகவல்
தாஷமக்கான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2026 15:28 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தேர்வு செய்யும் கதைகளை பார்வையாளர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு டீசல் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தாஷமக்கான். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற லிஃப்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள்னர்.

சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம்?

ஹரிஷ் கல்யாணின் வரவிருக்கும் படமான தாஷமக்கான் அப்பகுதியின் அடையாளத்தின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், தணிக்கைத் துறையினரின் ஆட்சேபனைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, இப்படம் மேலதிக ஆய்வுக்காக மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, படத்தின் சான்றிதழ் வழங்கும் கால அட்டவணையைப் பாதிக்கக்கூடும், மேலும் படக்குழுவினர் இந்தச் செயல்முறையின் அடுத்த கட்டத்திற்காகக் காத்திருக்கின்றனர். கூறப்படும் இந்த வெட்டுக்களும், மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டதும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Also Read… Arya40: ஒரே ஆணை காதலிக்கும் இரு பெண்கள்.. ஆர்யாவின் 40வது பட டைட்டில் வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… SK27: சிவகார்த்திகேயனின் SK27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்!

Follow Us