ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
Jason Sanjay Debut Here Movie | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்த பிறகு அவரது மகன் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அவர் தமிழ் சினிமாவில் நாயகனாகதான் அறிமுகம் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த போது அவர் இயக்குநராகவே சினிமாவில் தன்னை அறிமுகம் ஆக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் காரணமாகவே ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் சிக்மா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இயக்குநராக மட்டும் இன்றி அவர் நாயகனாக நடிப்பார் என்று பேட்டிகளில் பேசியபோது தெரிவித்து இருந்தார். ஆனால் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகவேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன சிக்மா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




ஜேசன் சஞ்சய் நாயகனாகும் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்:
அந்த வகையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி உள்ள தகவலின்படி, லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சயை அவரது அறிமுகப் படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கதாநாயகனாக அவர் நடிக்கும் முதல் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குநர்களிடமிருந்து அவர்கள் கதை கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிக்மா படைப்பில் ஜேசன் சஞ்சய்க்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ், ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்தை இயக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read… Jailer 2: தமிழகத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 பட FDFS எப்போது தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,
– Lyca has reportedly signed Jason Sanjay for his debut film and will also produce his first film as a hero.
– They are reportedly hearing stories from several directors, including Lingusamy. Now, it is being said that #JasonSanjay’s first film as a hero may be directed by Vikranth’s brother, #Sanjeev, who has previously provided major support to Jason Sanjay in Sigma. The film’s budget is reportedly said to be around 35 crores.
— Movie Tamil (@_MovieTamil) October 8, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள சூரியின் மண்டாட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!