எல்.ஆர்.ஈஸ்வரியின் பேமஸ் பாடலை பதிவிட்டு நவராத்திரி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
Prime Minister Modi extends Navaratri greetings | பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். மெட்ரோ திறப்பு விழாவிற்கு வந்த அவர் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலுடன் வாழ்த்தை பதிவு செய்த்துள்ளார்.
தமிழ் நாட்டில் இன்று சென்னையில் மெட்ரோ பயணத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ பணிகளை பார்வையிட்டு தொடர்ந்து மெட்ரோ சேவையையும் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பான செய்திகள் தமிழ் நாட்டில் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ பணிகளை பார்வையிட்டு வருகிறார். அது தொடர்பான வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தமிழ் நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நவராத்திரிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலையும் இணைத்துள்ளார்.
சினிமாவில் பிரபல பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் சினிமா பாடல்கள் ஒருபக்கம் அதிக அளவில் பிரபலமாக இருந்தாலும் அவர் சாமிப் பாடல்களை அதிக அளவில் பாடியுள்ளார். அப்படி அவர் பாடிய பாடல்கள்தான் தமிழ் நாட்டில் பல கோவில்களில் தற்போதும் ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது.




எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலுடன் நவராத்திரி வாழ்த்து சொன்ன பிரதமர்:
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள நவராத்திரி வாழ்த்துப் பதிவில் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நவராத்திரியின் மங்களகரமான தொடக்கத்தில், அமைதியின் அதிதேவதையான அன்னை சைலபுத்ரியின் திருவடிகளில் கோடானுகோடி வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். அன்னையின் தெய்வீக அருளானது அனைவரின் இதயங்களிலும் பொறுமை மற்றும் தன்னம்பிக்கை எனும் சுடரை ஏற்றட்டும். நாட்டின் மக்கள் மீது அன்னையின் ஆசிகள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… Haiku: அகனின் ஹைக்கூ படத்தின் ‘கருவிழி’ என்ற முதல் பாடல் வெளியீடு!
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
नवरात्रि के शुभारंभ पर शांति की अधिष्ठात्री मां शैलपुत्री के चरणों में कोटिश: नमन। उनकी दिव्य कृपा से सभी के मन में धैर्य और आत्मविश्वास का दीप प्रज्वलित हो। देशवासियों पर सदैव मां का आशीर्वाद बना रहे, यही कामना है।
https://t.co/z4ktFiTagZ
— Narendra Modi (@narendramodi) October 11, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஓபன் டாக்