Suriya: வாழ்க்கையிலும் அதை ஒன்ஸ் மோர்-னு எடுத்துக்கோங்க.. ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்!
Suriya Inspirational Speech: தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகராக இருந்துவருபவர் சூர்யா. இவர் தொடர்ந்து தனது புதிய திரைப்படங்களில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவகுமார் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் வாழ்க்கைக்கான அட்வைஸ் குறித்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் 2026ம் ஆண்டில் தொடர்ந்து இரு ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இந்த ஆண்டில் கருப்பு (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என இரு படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை புடைத்திருந்தது. இந்த படங்களானது 3 மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் புதிதாக வெளியாக காத்திருக்கும் படம் சீன் (Scene). இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்தை அடுத்ததாக தனது 48வது படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா பிசியாக இருந்துவருகிறார்.
அந்த விதத்தில் சமீபத்தில் நடைபெற்றிருந்த ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 47வது ஆண்டு விழாவில் சூர்யா கலந்துகொண்டார். அதில் மேடையில் பேசிய அவர், வாழ்க்கைக்கான அட்வைஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸில் ஓபன் நாமினேஷனால் அவினாஷ் – சாந்தினி இடையே ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் வீடியோ
வாழ்க்கைக்கான அட்வைஸ் சொன்ன நடிகர் சூர்யா:
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய சூர்யா, “சினிமால இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். ஒரு காட்சிக்கு ரீடேக் போனா, அத ஃபெயிலியர் னு சொல்லமாட்டோம், ஒன்ஸ் மோர்-னு தான் சொல்லுவோம். அத மாதிரி, வாழ்க்கைல எல்லாத்தியும் ஃபெயிலியர்-னு பாக்காம ஒன்ஸ் மோர்-னு எடுத்துக்கோங்க. எல்லாத்துக்குமே முதல் படி-ல ஒன்னும் இருக்காது.
இதையும் படிங்க: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
நான் சினிமாவில் வரும்போது எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது. எதுவும் தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிஹால்சல்தான் 29 வருசத்துக்கு பிறகு இங்க இப்படி நிக்கவெச்சிருக்கு. என்னால வரமுடியும் என்றால் நீங்கள் எது எல்லாம் ஆசைப்படுறீங்களோ அதுலயும் வரமுடியும்” என அந்த நிகழ்ச்சியில் எழுச்சியாக பேசியிருந்தார்.
சூர்யா சொன்ன வாழ்க்கை அட்வைஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
Exclusive : ” Cinema la irundhu naraya kathukitten. Oru scene ku retake pona, adha failure nu solla maatom, “ Once more ” nu dhaan solluvom. Adhe maari, vaazhkai la ellathayum failure nu paakaama, “ Once more ” nu
eduthukonga♥️♥️ “– @Suriya_offl Naa inspiring words to the @agaramvision students today.
— Suriya Fans Trends (@Trendz_Suriya) October 11, 2026
நடிகர் சூர்யா சீன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படமானது உண்மை கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுவருகிறதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ஜன நாயகன் பட இயக்குநர் எச். வினோத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு பிறகு தனது 50வது படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இணைவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.