பிக்பாஸில் ஓபன் நாமினேஷனால் அவினாஷ் – சாந்தினி இடையே ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது போல முதல் புரோமோவில் காட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது புரோமோவில் அது தொடர்பாக சண்டைகள் நடைபெறுவது காட்டப்பட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து 5 வாரங்கள் முடிவடைந்து 6-வது வாரம் எட்டியுள்ளது. மேலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இந்த போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் பொது மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக காமென் மேன் என்ற போட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு தொடக்கத்தில் மூன்று போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு போட்டியாளர்கள் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பட்டனர். அதில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் காமென் மேன்கள் என போட்டியாளர்கள் விறுவிறுப்பாக போட்டியில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 6-வது வாரத்தில் நடைபெறும் நாமினேஷனை ஓபன் நாமினேஷனாக நிகழ்ச்சி குழு அறித்தது. இதனால் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். இது போட்டியாளர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.




ஓபன் நாமினேஷனால் அவினாஷ் – சாந்தினி இடையே ஏற்பட்ட பிரச்சனை:
இந்த நிலையில் ஓபன் நாமினேஷன் முடிவடைந்த பிறகு சாந்தினி அவினாஷை நாமினேட் செய்து இருந்தார். இதனால் அவினாஷ் தன்னை நாமினேட் செய்ய கூறிய காரணம் சரியானதாக இல்லை என்றும் நான் மிகவும் அக்ரசிவாக விளையாடுகிறேன் என்றால் இந்த வீட்டில் வேறு யாரும் அப்படி விளையாடவில்லையா. அப்படி விளையாடியவர்கள் உங்களது கண்களுக்கு தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். இது இவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… முடிவிற்கு வந்தது தனுஷ் 56 படத்தின் பிரச்சனைகள்… வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day36 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/kwFKkLeRs6
— Vijay Television (@vijaytelevision) October 12, 2026
Also Read… உயிர் – உலக் உடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பேமிலி வெக்கேஷன் – வைரலாகும் கிளிக்ஸ்!