ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 பார்த்து இருக்கீங்களா? மிஸ் செய்யாதீர்கள்
Kerala Crime Files Part 2 | மலையாள சினிமாவில் தொடர்ந்து பலதரப்பட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது போல இணையதளங்களில் தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது கேரள க்ரைம் ஃபைல்ஸ் 2.
மலையாள சினிமாவில் ஃபேமிளி செண்டிமெண்ட், லவ், ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் என எந்த பாணியில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் அந்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவதுபோல மலையாள சினிமாவில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பாகம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. அந்த தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. க்ரைம் இன்வெஸ்டிகேசன் பாணியில் இந்த தொடர் உருவாகி இருந்தது. முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்படி இந்த கேரளா கிரைம் ஃபைல்ஸ் பாகம் 2 தொடர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்த தொடரில் நடிகர்கள் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், இந்திரன், ஹரிஸ்ரீ அசோகன், ரஞ்சித் சேகர், நூரின் ஷெரீஃப், ஃபரா ஷிப்லா, ஜியோ பேபி, எஸ்.பி.ஸ்ரீகுமார், பினு தேவ், சுரேஷ் குமார், ரமேஷ் மேனன், பிரசாந்த் மாதவன், நிதீஷ், ஜி.சாபு, சுதீர் பாபு, சனோஷ் முரளி, சஜி துளசிதாஸ், ஹரிஷ், பிலாஸ் நாயர், கோபன் ராமச்சந்திரன், ரிஷிகேஷ், சோனா ஆபிரகாம், சிராஜுதீன் நாசர், ராகுல் சண்முகன், ஜிஜோய் ராஜகோபால், மஞ்சுஸ்ரீ,
சூர்யா எஸ் குருப், ஆன்சி, ஷிபு, அம்ருதா மற்றும் ராயா பாத்திமா என பலர் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
ஹாட்ஸ்டாரில் உள்ள கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 பார்த்து இருக்கீங்களா?
இந்த தொடரில் கேரள போலீஸில் வேலை செய்யும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியாக நடிகர் இந்திரன்ஸ் நடித்து உள்ளார். தொடரின் தொடக்கத்தில் ஒரு விசாரணை கதைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார் இந்திரன்ஸ். அவர் அப்படி செல்லும் போதே அந்த ஊர் மக்கள் இந்திரன்ஸ் மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளனர் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளனர்.




இப்படி இருக்கும் நிலையில் அந்த நிகழ்விற்கு பிறகு நடிகர் இந்திரன்ஸ் காவல் நிலையத்திற்கும் செல்லவில்லை வீட்டிற்கும் செல்லவில்லை. அப்படி இருக்கும் போது அவரது கைப்பேசி ஒரு அனாமத்தான இடத்தில் கிடைக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் காவல்துறையினர் இறங்குகின்றனர். அப்போது என்ன எல்லாம் நடந்தது என்பதே இந்த தொடரின் கதை என்ன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அட அர்ஜுனின் இளைய மகளுக்கு திருமணமா? எப்போது தெரியுமா?