ஜெயிலர் 2 படத்திலிருந்து அந்த நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதா? வைரலாகும் தகவல்
Jailer 2 Movie Update | தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள பெரியப் படம் என்றால் அது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து இரண்டு முக்கிய நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி இந்த ஜெயிலர் 2 படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் பல முக்கிய நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது போல இரண்டாம் பாகத்திலும் பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு முக்கிய நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.




ஜெயிலர் 2 படத்திலிருந்து அந்த நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதா:
இந்த நிலையில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி, சந்தானம் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டூரிங் டாக்கீஸ் வெளியிட்ட தகவலின்படி, படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் சேர்த்தால் படத்தின் ஆரம்பகால நீளம் 3 மணிநேரம் 20 நிமிடங்களுக்கும் அதிகமாக இருந்தது. படத்தின் வேகத்தைத் தக்கவைக்க, தயாரிப்பாளர்கள் பல காட்சிகளை நீக்கி, இறுதி நீளத்தை சுமார் 2 மணிநேரம் 45 நிமிடங்களாகக் குறைத்ததாகத் தெரிகிறது.
இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, சந்தானத்தின் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டன. அதே சமயம் விஜய் சேதுபதி படத்தின் இறுதிக்கட்டத்தில் சுமார் ஒரு நிமிடம் மட்டும் தோன்றும் வகையில் தக்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜெயிலர் 3 படத்திற்கான ஒரு முன்னெடுப்பாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.
இருப்பினும், நீக்கப்பட்ட காட்சிகள், படத்தின் இறுதி நீளம் மற்றும் ஜெயிலர் 3 உடனான சாத்தியமான தொடர்பு குறித்த இந்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஜெயிலர் 2ல் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி முன்பே உறுதிப்படுத்தியிருந்த போதிலும், டிரெய்லரில் அவர் இடம்பெறாதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள சூரியின் மண்டாட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Vijay Sethupathi, Santhanam’s Scenes Cut from #Jailer2?
Despite featuring several prominent actors, #VijaySethupathi , #Santhanam and Redin Kingsley were reportedly absent from the trailer and promotional events of #Rajinikanth’s Jailer 2.
According to an Touring Talkies report, the film’s original runtime exceeded 3 hours and 20 minutes when all the filmed portions were included. To maintain the film’s pace, the makers reportedly removed several scenes, bringing the final runtime down to approximately 2 hours and 45 minutes.
As part of these edits, Santhanam’s portions were removed entirely, while Vijay Sethupathi is said to have retained a brief appearance of around one minute towards the climax, potentially setting up a lead for Jailer 3.
However, these details about the deleted scenes, final runtime and possible Jailer 3 connection have not been officially confirmed.
Vijay Sethupathi’s absence from the trailer has also drawn attention, although he had previously confirmed his cameo in Jailer 2.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) October 11, 2026
Also Read… டோரதி பட ஹிட்… சனந்த் மற்றும் ரிஷிகாந்த்துக்கு வாழ்த்து மடலை அனுப்பிய சியான் விக்ரம்!