AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ashwath Marimuthu: சார் எப்படியாவது நல்ல பண்ணிடுவேன் சார்.. தர்மன் படம் குறித்து ரஜினியிடம் அஸ்வத் சொன்ன விஷயம்!

Ashwath Marimuthus Bold Promise: தமிழ் சினிமாவில் இயக்குநராக மக்களிடையே பேமஸானவர் அஸ்வத் மாரிமுத்து. இவரின் இயக்கத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய படம்தான் தர்மன். இப்படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்திடம் பகிர்ந்த விஷயம் குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார்.

Ashwath Marimuthu: சார் எப்படியாவது நல்ல பண்ணிடுவேன் சார்.. தர்மன் படம் குறித்து ரஜினியிடம் அஸ்வத் சொன்ன விஷயம்!
ரஜினிகாந்த் மற்றும் அஷ்வத் மாரிமுத்துImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Oct 2026 21:45 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 171 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் 172வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு தலைவர் 173 (Thalaivar173) என அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் தர்மன் (Dharman). இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கிவருகிறார். இவர் டிராகன் (Dragon) மற்றும் ஓ மை கடவுளே (Oh My Kadavule) போன்ற படங்களை இயக்கி பேமஸானவர். இவரின் இயக்கத்தில் 3வது படமாக தர்மன் உருவாக்கப்பட்டுவருகிறது.

இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டார். அதில் தர்மன் பட ஷூட்டிங்கின்போது ரஜினியிடம் சொன்ன விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஸில் குழந்தை போல பேசிய டிடிஎப் வாசன்.. கலாய்த்த விஜய் சேதுபதி!

தர்மன் படத்தின் ஷூட்டிங்கின்போது ரஜினியிடம் சொன்ன விஷயம் குறித்து பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து:

அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, “கமல் சார் தயாரிப்பில் ரஜினிகாந்த் சார் நடித்த படம் தர்மன். என்னைப் பொறுத்தவரை, இவ்வளவு பெரிய வாய்ப்பைப் பெறுவது ஒரு பெரிய விஷயம், அதை வழங்குவதற்கான எனது திறனுக்கான சோதனையாக நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் படம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு!

நான் தர்மன் படத்தின் ஷூட்டிங்கின்போது ரஜினி சாரிடம், ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். “சார் இந்த படத்தை எப்படியும் நான் நன்றாக பண்ணிவிடுவேன் சார், அப்படி நான் நன்றாக பண்ணிவிட்டால், என்னைப்போல நிறைய இயக்குநர்களுக்கு அதற்கான நம்பிக்கை கதவு திறக்கும். நீங்களும் இளம் இயக்குநர்களை நம்புவீர்கள் என அவரிடம் சொல்லியிருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தர்மன் திரைப்படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த தர்மன் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருடன், சிம்ரன், ராசி கன்னா மற்றும் தெலுங்கு நடிகை ராம் பொத்தினேனி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். அனிருத்தின் இசையில் இப்படமானது உருவாக்கப்பட்டுவரும் நிலையில், படத்தின் ஷூட்டிங் விபிரிவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us