திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் ‘டோரதி’ திரைப்படம்! படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர் வன்னியரசு
இதுகுறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “பல கிராமங்களில் ஒருவர் திருநங்கையாகத் தன்னை உணரும் போது, அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருநங்கைகள் மீது திணிக்கப்படும் வன்முறைகள் மாற வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம்தான் ‘டோரதி’” எனக் குறிப்பிட்டார்.
அக்டோபடர் 14, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் ‘டோரதி’ திரைப்படக் குழுவினரைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், திருநங்கைகளின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
டோரதி படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன அமைச்சர் வன்னியரசு:
இதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர்கள் ரஷிகாந்த், சனத் உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், படக்குழுவினரைச் சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்த அமைச்சர் வன்னியரசு, அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் திரைப்படம் – அமைச்சர் வன்னியரசு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, “இந்தத் திரைப்படம் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எனது வாழ்த்துகள். திருநங்கைகள் மனித சமூகத்தின் ஓர் அங்கம் என்பதைச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். ‘டோரதி’ திரைப்படம் அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற படைப்புகள் மேலும் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
திருநங்கைகள் மீதான வன்முறைகள் மாற வேண்டும் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
இதுகுறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “பல கிராமங்களில் ஒருவர் திருநங்கையாகத் தன்னை உணரும் போது, அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருநங்கைகள் மீது திணிக்கப்படும் வன்முறைகள் மாற வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம்தான் ‘டோரதி’” எனக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை கலந்து ஆலோசிக்க வேண்டும் – சி.வி சண்முகம்
திருநங்கைகளின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.