AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vrushakarma: இன்னும் 50 நாட்களில்.. நாக சைதன்யாவின் விருஷகர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vrushakarma Release Date Out: தெலுங்கு சினிமாவில் மக்களிடையே பேமஸான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் நாக சைதன்யா. இவரின் நடிப்பில் தெலுங்கில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம்தான் விருஷகர்மா. இந்த படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Vrushakarma: இன்னும் 50 நாட்களில்.. நாக சைதன்யாவின் விருஷகர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விருஷகர்மா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 18:45 PM IST

தென்னிந்திய சினிமாவில் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் நாக சைதன்யா (Naga Chaitanya). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்தவரும் நிலையில், இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தண்டேல் (Thandel). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சந்தூ மொண்டேட்டி (Chandoo Mondeti) இயக்கியிருந்த நிலையில், இப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு நாக சைதன்யா இணைந்து நடித்திருந்த இயக்குநர்தான் கார்த்திக் வர்மா தண்டு (Karthik Varma Dandu). இவரின் இயக்கத்தில் தெலுங்கில் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் விருஷகர்மா (Vrushakarma).

இப்படமானது அட்வெஞ்சர் மற்றும் அறிவியல் புனைகதைகளை உள்ளடக்கிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் ஆதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக் பாஸில் டைமென்டை திருடிய டிடிஃஎப் வாசன்.. மாஸ்டர் பிளான் போடும் அவினாஷ்!

நாக சைதன்யாவின் விருஷகர்மா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீனாக்ஷி சௌத்ரி நடித்துள்ளார். இந்த படமானது புராண சாகசம் மற்றும் புதையல் வேட்டை தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்திற்கு கிடைத்த சென்சார் இதுதான் – வைரலாகும் தகவல்

அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 50 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இதன் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

விருஷகர்மா ரிலீஸுடன் மோதும் தமிழ் படம்:

இந்த விருஷகர்மா படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதே நாளில் தமிழில் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருக்கும் நிலையில், சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Follow Us