நீங்கு புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் – பிக்பாஸில் எதிரணியை கலாய்த்த விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 6-வது வாரம் முடிவை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற ஆளும் அணி மற்றும் எதிரணியின் செயல்கள் குறித்து விஜய் சேதுபதி பேசுவது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாரம் முழுவதும் பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் நடந்த விசயங்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் நடந்துகொண்ட விதம் என அவர்களின் செயல்கள் குறித்து வெளிப்படையக பேசுவது வழக்கம். அதன்படி இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இதனை தொகுத்து வழங்கி வந்தார். அவர் இந்த நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்கவில்லை என்று தெரிவித்த பிறகு யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-வது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 6-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று 6-வது வார கடைசி நாள் என்பதால் தொகுப்பாளர் விஜய் சேதுபதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் செயல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




பிக்பாஸில் எதிரணியை கலாய்த்த விஜய் சேதுபதி:
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள தலைவர் அன்சரை கோபப்படுத்தி எரிச்சலடைய செய்ய வேண்டும் என்று எதிரணியில் உள்ளவர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி நடந்ததா என்று கேட்டால் இல்லை. இதன் காரணமாக இன்று பிக்பாஸில் எதிரணியினரை விஜய் சேதுபதி கலாய்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டோரதி படத்திலிருந்து வெளியானது கல்யாண விருந்து வீடியோ பாடல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day42 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 18, 2026
Also Read… வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் டீசர்!