வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் டீசர்!
Aakasamlo Oka Tara Movie Teaser Out Now | பான் இந்திய நட்சத்திரம் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஒக தாரா. இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.
மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது பான் இந்திய நட்சத்திரமாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஐ அம் கேம். ஃபேண்டசி ட்ராமா பாணியில் உருவாகி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஒக தாரா. தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் டீசர்:
இந்தப் படத்தை இயக்குநர் பவன் சாடினேனி எழுதி இயக்கி உள்ள படம் ஆகாசம்லோ ஒக தாரா. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை சாத்விகா வீரவல்லி நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் டீசரைப் பார்க்கும் போது பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகி உள்ளது தெரிகிறது. அது எந்த அளவிற்கு பேசப்பட்டுள்ளது என்பது படம் வெளியாகும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் திருடுபோன வைரம்… சந்தேகத்தின் வலையில் சிக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
ஆகாசம்லோ ஒக தாரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The dream is hers….
the belief is his and the journey is theirs ❤️#AOTTeaser out now ✨
▶️ https://t.co/FjKxdhHLDDThis November 20th something beautiful is waiting for you 😍
#AakasamLoOkaTara #AOTMovie
#AOTonNOV20th
@dulQuer @pavansadineni @GeethaArts @SwapnaCinema @Lightboxoffl @shrutihaasan @satveeravalli @gvprakash @grajug @sunnygunnam @ramya_gunnam @sujithsarang @TSeries @tseriessouth— Geetha Arts (@GeethaArts) October 17, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியைப் பார்த்த ஓஜி ஃபேன் பாய் தனுஷ் – வைரலாகும் போட்டோஸ்!