AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் வைரத்தை திருடி மாட்டிக்கொண்ட முனியம்மாள் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 6-வது வாரம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் போட்டியாளர்களிடையே விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் வைரத்தை திருடி மாட்டிக்கொண்ட முனியம்மாள் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 12:59 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்களுடன் 6-வது வாரம் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த 6-வது வாரத்தில் இரண்டு டாஸ்குகள் ஒரே நேரத்தில் நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை நடைப்பெற்ற டாஸ்குகளைவிட இந்த 6-வது வாரத்தில் நடைபெறும் டாஸ்குகள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 6-வது வாரம் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் மாரத்தான் என இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் இந்த டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. நேற்று முதல் யார் அந்த டைமண்டை திருடுவார்கள் என்று போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

அதன்படி நேற்றையை எபிசோடில் போட்டியாளர்கள் பலர் அந்த டைமண்டை எப்படி திருடலாம் என்று திட்டமிடுவது வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் சில போட்டியாளர்கள் அந்த டைமண்டை திருடவும் முயற்சி செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் வைரத்தை திருடி மாட்டிக்கொண்ட முனியம்மாள்:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வீடியோவில் வீட்டில் உள்ள யாராச்சும் அந்த டைமண்டை திருடுங்கள் என்று ஷாதிகா ஏத்திவிட முனியம்மாள் அதனை திருடி மறைத்து வைக்க முயற்சிக்கிறார். அதனை கரிஷ்மா பார்த்துவிடுகிறார். இந்த நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் முனியம்மாள் திருடியது கையும் கலவுமாக தெரிவிந்துவிடுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Pooja Hegde: பூஜா ஹெக்டேவின் கைவசம் உள்ள புதிய படங்கள்.. அட என்னென்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம்? வைரலாகும் தகவல்

Follow Us