AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

Pradhama Drishtiya Kuttakkar Movie OTT Review Here | நடிகை பார்வதி நடிப்பில் மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான படம் பிரதம திருஷ்டிய குட்டக்கர். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
பிரதம திருஷ்டிய குட்டக்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2026 18:20 PM IST

மலையாள சினிமாவில் வெளியாகும் க்ரைம் திரில்லர் படங்கள் பெரும்பாலானவை மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளது. அதுதான் சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம். இந்தப் படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியானது. இயக்குநர் ஷஹாத் நிலம்பூர் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் பி.எஸ்.சுப்ரமணியன் மற்றும் விஜேஷ் தோட்டுங்கல் ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக அதிக அளவில் பாராட்டைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை பார்வதி கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மேத்யூ தாமஸ், விஜயராகவன், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், வினய் கோட்டை, அஸீஸ் நெடுமங்காடு, பாலாஜி சர்மா, சிராஜுதீன் நாசர், கேத்தரின் மரியா, ஜெயஸ்ரீ சிவதாஸ், மிதுன் வேணுகோபால், சுபர்ணா எஸ், ஜெய சங்கர், விருந்தா மேனன், பிபின் ஜோசப் வெட்டுகாட்டில், ரினி கே. ராஜன், ஜெயராஜன் கோழிக்கோடு, அனுஷா அரவிந்தாக்ஷன், சல்மான் குட்டிக்கோடு,
கலாபவன் நியாஸ், நந்தினி கோபாலகிருஷ்ணன், ஷிஃபா பாதுஷா, பிரவீன் செல்வம்,
தினேஷ் பிரபாகர், லால் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் ஆசிப் அலி மற்றும் ஆர்.பார்த்திபன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தின் கதை என்ன?

படத்தின் தொடக்கதிலேயே கைக் குழந்தையுடன் பார்வதி இருக்கும் போதே அவரது கணவர் ஆசிஃப் அலி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையில் பணிபுரிந்த அவரது வேலை பார்வதிக்கு கிடைக்கும் என்று மேல் அதிகாரிகளால் கூறப்படும் போது பார்வதி தனக்கு ஆஃபிஸ் வேலை வேண்டாம் என்றும் யூனிஃபார்ம் போட்டு தனது கணவரைப் போல வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து போலீஸ் ட்ரெய்னிங்கில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலைக்கும் சேர்கிறார். அப்படி சேர்ந்து வேலை செய்துகொண்டு இருக்கும் போது இரவு பணியில் தன்னுடன் வேலை செய்யும் மற்ற காவலர்களுடன் இணைந்து வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருக்கிறார்.

அங்கு காரில் வரும் நபர் தூரத்திலேயே போலீஸ் இருப்பதை பார்த்து வண்டியை திருப்பிக்கொண்டு செல்ல அவரை துரத்தி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர். அந்த நபரை விசாரிக்க முற்படும் போது அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அப்போது மற்றொரு பெண் போலீசின் துப்பாக்கியை அந்த நபர் எடுக்க அவரிடம் இருந்து துப்பாக்கியை பரிக்கும் முயற்சியில் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை பார்வதியுடன் இருக்கும் மற்ற மூன்று போலீஸாரும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அப்படி இருக்கும் சூழலில் தாங்கல் கொலை செய்த நபர் காரில் ஒரு பெண்ணின் சடலமும் கிடைக்கின்றது. பிறகு அந்த கொலைசெய்யப்பட்ட நபர் ஒரு வீட்டில் கொல்லையடிக்க முயன்று அங்கு இருந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்துவிட்டதும் தெரிகிறது.

Also Read… Sai Pallavi: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!

இப்படி அடுக்கடுக்கான குற்றங்களை செய்த நபரை கொலை செய்து இருந்தாலும் அது தண்டனைக்குறிய விசயம் என்பதால் அதிலிருந்து தப்பிக்க பார்வதி என்ன எல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிக்பாஸ் தமிழில் இந்த வாரம் நடைபெறும் ஓபன் நாமினேஷன்… வைரலாகும் வீடியோ

Follow Us