AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் மண்டாடி பட வில்லன்.. சூரி பகிர்ந்த டைட்டில் புரோமோ!

Suhas Tamil Hero Debut: தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்துவந்தவர் சுஹாஸ். இவர் தமிழில் சூரியின் மண்டாடி படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்போது நேரடியாக தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கு புதிய படத்தின் டைட்டில் டீசரை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் மண்டாடி பட வில்லன்.. சூரி பகிர்ந்த டைட்டில் புரோமோ!
ஹைட் அண்ட் சில்க் திரைப்பட ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 19:29 PM IST

இயக்குநர் புகழேந்தி மதிமாறன் (Mathimaran pugazhendhi) இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான திரைப்படம்தான் மண்டாடி (Mandaani). இந்த படத்தில் நடிகர் சூரி (Soori) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், நடிகையாக மஹிமா நம்பியார் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் (Shuhas) என்பவர் மெயின் வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், தற்போது தமிழில் மெயின் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டார். இது இவருக்கு அறிமுக படமாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் ராஜேந்திர பாலா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு “ஹைட் அண்ட் சில்க்” (Hide And Silk) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டைட்டில் ப்ரோமோவை பதிவை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அப்டேட் விரைவில்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவு!

நடிகர் சூரி பகிர்ந்த சுஹாஸின் ஹைட் அண்ட் சில்க் பட டைட்டில் புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த படத்தின் மூலம் தமிழில் நடிகர் சுஹாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் நிலையில், இப்படமானது தெலுங்கு மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுஹாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் SK27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்!

இதை இயக்குநர் ராஜேந்திர பாலா இயக்க, இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துவருகிறார். தற்போது இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

ஹைட் அண்ட் சில்க் பட புரோமோ எப்படி இருக்கு:

இந்த ப்ரோமோவில் காட்டியபடி, நடிகர் சுஹாஸ் இதில் ஒரு நெசவாளராக நடித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் பேக்ரவுண்ட் வாய்ஸ்சுடன் இந்த ப்ரோமோ தொடங்குகிறது. ஒரு பெண்ணுக்காக சேலையை நெய்ய தொடங்கும் சுஹாஸ் மற்றும் அந்த சேலையை வாங்கும் சஞ்சனா இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்கிறது என்பது தொடர்பான வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. தற்போது இதன் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us