AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் சீன் படத்திலிருந்து வெளியான ஆத்தி இவ யார்ரா பாடலின் லிரிக்கள் வீடியோ

Aathi Iva Yarraa lyric video from the Scene movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ஆத்தி இவ யார்ரா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் சீன் படத்திலிருந்து வெளியான ஆத்தி இவ யார்ரா பாடலின் லிரிக்கள் வீடியோ
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 11:23 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் 3-வதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நஸீம், நஸ்லேன் மற்றும் ராஜ் பிரியன் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் ஆத்தி இவ யார்ரா பாடலின் லிரிக்கள் வீடியோ:

இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஆத்தி இவ யார்ரா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் 10 மில்லியன் பார்வைகளுக்கு அதிகமாக பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் டைமண்ட்டை திருட திட்டம்போடும் டிடிஎஃப் வாசன்… வைரலாகும் புரோமோ வீடியோ

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முன்பதிவில் ஜெயிலர் 2 வசூலித்தது இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்

Follow Us