AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த உலகில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு – டோரதி படத்தைப் பாராட்டி பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்

Actor Vishnu Vishal Praised Dorothy Movie | நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான டோரதி படத்தைப் பார்த்துவிட்டு தனது வாழ்த்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு – டோரதி படத்தைப் பாராட்டி பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்
டோரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 11:52 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் சிறப்பாக இருக்கிறது என்றால் அதனைப் பாராட்டுவதிலும் தயக்கம் காட்டியது இல்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான டோரதி படத்தைப் பார்த்துவிட்டு தனது வாழ்த்து பதிவை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோரதி படத்தைப் பாராட்டி பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்:

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ விடுவோம். தனிப்பட்ட வேறுபாடுகளையும் தேர்வுகளையும் ஏற்றுக்கொள்வோம். மற்றவர்களின் வாழ்க்கையைச் சிதைக்காத அல்லது யாருக்கும் தீங்கு விளைவிக்காத வரை, இந்த உலகில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள். ரிஷிகாந்த் மற்றும் குறிப்பாக சனந்தின் அப்பாவித்தனமான நடிப்பு டோரதிக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘ராஜா சார்’ எப்போதும் ‘ராஜா சார்’ தான். நமக்குத் தேவை பரஸ்பர ஏற்புத்தன்மை; நமக்குத் தேவை அன்பு.

Also Read… பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு? 20 ஆண்டுகளைக் கடந்து நடிகர் சிம்புவின் வல்லவன் படம்!

Follow Us