டோரதி படத்திலிருந்து வெளியானது கல்யாண விருந்து வீடியோ பாடல்
Kalyana Virundhu Video Song | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் டோரதி. இந்தப் படத்தில் இருந்து கல்யாண விருந்து என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களின் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ள நடிகர்கள் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம் மற்றும் சூர்யா என பலருடன் இணைந்து பணியாற்றி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. திருநங்கைகளின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இந்தப் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வதாக உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து டோரதி படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக வெளி நாடுகளில் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு உள்ள பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




டோரதி படத்திலிருந்து வெளியானது கல்யாண விருந்து வீடியோ பாடல்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து படம் வெளியாவதற்கு முன்பே வெளியான கல்யாண விருந்து என்ற பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் பாடலை பாடகர்கள் யுகேந்திரன், ஆண்டணி தாசன் மற்றும் பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கலகலப்பாக வெளியானது கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் டீசர்!
கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here is the Full video song of #KalyanaVirundhu
An Ex-Wedding Paattu by Maestro @ilaiyaraaja Sir
https://t.co/xIxFSsqLSU
#Dorothy
#DorothyBlockBusterHIT
#DorothyTheCinemaTheChange— karthik subbaraj (@karthiksubbaraj) October 16, 2026
Also Read… ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம்? மக்களின் விமர்சனம் இதோ!