ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி… ஒரு ஆண்டை நிறைவு செய்தது துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம்!
One Year Of Bison Kaalamaadan Movie | நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவடைந்துள்ளதை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநராக அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் கபாடி விளையட்டு வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டினை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் மனத்தி கணேசனாக நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், ஹரிதா முத்தரசன், கே. பிரபஞ்சன், மதன்குமார் தட்சிணாமூர்த்தி,
அனுராக் அரோரா, புளியங்குளம் கண்ணன், சுபத்ரா ராபர்ட், விஸ்வதேவ் ரச்சகொண்டா, லெனின் பாரதி மற்றும் திலிப் சுப்பராயன் ஆகியோர் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




ஒரு ஆண்டை நிறைவு செய்தது பைசன் காளமாடன் படம்:
சாதிய ரீதியான வன்கொடுமைகள் அதிகம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் கபாடி மீது தீவிரமான பற்று உள்ளவராக இருந்த மனத்தி கணேசன் சாதிய பாகுபாடால் பாதிக்கப்படுகின்றது. அந்த தடைகள் அனைத்தையும் தாண்டி அவர் எப்படி இந்தியவிற்காக விளையாடினார் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் துருவ் விக்ரமிற்கு இது ஒரு நல்ல ஹிட் கொடுத்த படமாகவும் அவரது திறமையை வெளிக்கொண்டுவந்த படமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… 22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
A YEAR OF #BISON! 🐂
From #DhruvVikram’s commanding performance to @mari_selvaraj’s powerful vision, #Bison continues to stand tall as a symbol of raw talent and cinematic excellence. ❤️🔥
One year later, the roar remains stronger than ever! 🔥
#1YearOfBison
@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @mari_selvaraj @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi #AmeerSultan @rajisha_vijayan @nivaskprasanna @thinkmusicindia @prasoon_garg @sunil_chainani #PramodCheruvalath @devnidhib @happyshappygal #ManindBedi
— Yuvraaj (@proyuvraaj) October 17, 2026
Also Read… விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்திற்கு கிடைத்த சென்சார் இதுதான் – வைரலாகும் தகவல்