AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் ஸ்கூல் படிக்கும்போது… அந்த நடிகரோட படத்தின் FDFS காட்சியை மிஸ் செய்ய மாட்டேன் – நடிகர் அசோக் செல்வன்!

Ashok Selvan talks about Suriya movies | தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சினிமா தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் ஸ்கூல் படிக்கும்போது… அந்த நடிகரோட படத்தின் FDFS காட்சியை மிஸ் செய்ய மாட்டேன் – நடிகர் அசோக் செல்வன்!
அசோக் செல்வன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Oct 2026 07:00 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் நடிகர் அசோக் செல்வன். அதன்படி சூது கவ்வும் என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் அசோக் செல்வன். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பீட்சா 2 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், போர் தொழில், ப்ளூ ஸார் என பலப் படங்கள் ரசிகர்களிடையா அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் அன்பில் அவன். காதலித்து திருமணம் செய்துகொள்ளும் ஜோடிக்கு நடுவே உள்ள காதல், மன கசப்பு, போராட்டம் என தற்போதைய இளம் ஜோடிகளின் வாழ்க்கையை மிகவும் அழகாக பிரதிபலிப்பதாக இந்தப் படத்தை பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த நடிகரோட படத்தின் FDFS காட்சியை மிஸ் செய்ய மாட்டேன்:

அதன்படி அவர் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, நான் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன். என் பள்ளி நாட்களில் சூர்யா சார் படம் வெளியான போதெல்லாம், முதல் நாள் முதல் காட்சியை (FDFS) தவறவிடாமல் பார்ப்பேன். நாங்கள் கொண்டாடினோம், நடனமாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக அசோக் செல்வன் டூப் இல்லாமல் சுமார் 60 அடிக்கு மேலான உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சியை வெளியிட்டு நடிகர் சூர்யா வாழ்த்துகளை பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நீங்கு புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் – பிக்பாஸில் எதிரணியை கலாய்த்த விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா? வைரலாகும் தகவல்

Follow Us