Love Bite: சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஷூட்டிங் ஓவர் – படக்குழு பகிர்ந்த வீடியோ!
Love Bite Shooting Wraps: தமிழில் நகைச்சுவை நடிகராக நடித்து, தற்போது சினிமாவில் நாயகனாக நடித்து மக்களை கவர்ந்துவருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் ஸாம்பி கதைக்களத்தில் உருவாகிவந்த திரைப்படம்தான் லவ் பைட். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்துள்ளது.
நடிகர் சந்தானம் (Actor Santhanam) தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படமானது “தில்லுக்கு துட்டு” பட தொகுப்பில் ஒரு படமாக வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன் பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) ஜெயிலர் 2 (Jailer 2 Movie) படத்தில் நடித்திருந்த நிலையில், அவர் இடம்பெற்றிருந்த காட்சியை நேர கட்டுப்பாட்டின் காரணமாக படக்குழு நீக்கிவிட்டதாம்.
இதை தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் (Conjuring Kannappan) பட இயக்குநர் இயக்கத்தில், சந்தானம் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் லவ் பைட் (Love Bite). ஸாம்பி கதைக்களத்தில் இந்த படமானது உருவாக்கப்பட்டுவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: டிடிஃஎப் வாசன் எப்படியாச்சும் ரெட் கார்ட் வாங்கணும்.. மாஸ்டர் பிளான் போடும் முகேஷ் – என்ன நடக்குது பா?
சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
It’s a WRAP for #LoveBite ♥️
Biting soon in theatres this December 😈
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@iamsanthanam @selvinrajxavier @aparnaDasss #Anandraj #VTVGanesh #MottaiRajendran https://t.co/XzWtC3epV3
— AGS Entertainment (@Ags_production) October 23, 2026
தமிழில் கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் செல்வின் ராஜ். இவரின் இயக்கத்தில் சந்தானம் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் லவ் பைட். ஸாம்பி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது.
இதையும் படிங்க: வித்தியாசமாகப் பார்க்க வைத்த கதை.. மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்த கயாடு லோஹர்!
இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஆனந்தராஜ், விடிவி கணேசன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
லவ் பைட் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
இந்த படமானது காமெடி மற்றும் ஸாம்பி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.