Love Bite Movie: சிட்னி ஸ்வீனி பயலுகா… ஹாரர் நகைச்சுவையுடன் வெளியான சந்தானத்தின் லவ் பைட் பட புரோமோ வீடியோ!
Love Bite Movie Promo Video: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து, தற்போது லீட் நடிகராக படங்களில் நடித்துவருபவர் சந்தானம். இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் லவ் பைட். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கிய நிலையில், இதன் அறிவிப்பு புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது சினிமாவில் லீட் கதாநாயகனாகவே படங்களில் நடித்துவருபவர் சந்தானம் (Santhanam). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) . இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார்.இப்படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தை பிறகு சிலம்பரசனுடன் (Silambarasan) ஒருபடத்தில் நடிக்கவிருந்தார். பின் அந்த படமும் கைவிடப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் (Selvin Raj Xavier) இயக்கத்தில் இவர் நடித்துவரும் புது படம்தான் லவ் பைட் (Love Bite). இதில் சந்தனம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் (Aparna Dass) நாயகியாக நடித்துவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று 2026 மே 12ம் தேதியில் தொடங்கியிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஹாரர், சாம்பி , காமெடி மற்றும் முற்றிலும் ஃபன் காட்சிகளுடன் வெளியான புரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: வேலும் மயிலும்.. புது இன்டீ பாடலை தயாரித்திருக்கும் சிவகார்த்திகேயன் – ப்ரோமோ வீடியோ இதோ!
சந்தானத்தின் லவ் பைட் படத்தின் புரோமோ வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Sydney Sweeney Payaluga.. Assemble 😂❤️
Welcome to the outbreak 😈#LoveBite Promo
▶️ https://t.co/kxbZyMXFzL#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@iamsanthanam @selvinrajxavier @aparnaDasss… pic.twitter.com/syRx0o5BQL— AGS Entertainment (@Ags_production) May 12, 2026
இந்த லவ் பைட் படத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் நடித்துவருகிறார். மேலும் இதில் நடிகர்கள் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், முத்துக்குமார், நிரோஷா, ரெடின் கிங்ஸ்லி, பாண்டிய ராஜன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தை கோட், டிராகன், போன்ற படங்களை தயாரித்திருந்த ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதையும் படிங்க: கருப்பு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதித்த தமிழ் நாடு அரசு – முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய படக்குழு
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் வெளியான காஞ்சுரிங் கண்ணப்பன் என்ற படத்தை இயக்கியிருந்தார். நடிகர் சதீஷ் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 2வது தயாராகிவரும் படம்தான் சந்தானத்தின் லவ் பைட் என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.