AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதித்த தமிழ் நாடு அரசு – முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய படக்குழு

Karuppu movie team thanks Chief Minister Joseph Vijay | நடிகர் சூர்யவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்திற்கு தமிழ் நாடு அரசு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ளது. இதற்கு படக்குழு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளது.

கருப்பு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதித்த தமிழ் நாடு அரசு – முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய படக்குழு
முதலமைச்சர் விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 19:57 PM IST

தமிழ் சினிமாவில் இந்த மாதத்தில் வெளியாகும் பெரியப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் ஆகும். நடிகர் சூர்யாவின் 45-வது படமாக உருவாகி உள்ள இந்த கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இன்றி முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

அதன்படி நேற்று ஹைதராபாத்தில் படத்தின் பிரிவியூ ஷோ நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பேசினர். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தொடர்ந்து படம் தொடர்பான புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய கருப்பு படக்குழு:

தமிழ் நாட்டின் 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நடிகர் தளபதி விஜய் அவர்கள் தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவர் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரியப் படம் என்றால் அது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு தான். இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடல் காலை 9 மணிக்கு  அனுமதித்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!

Follow Us