AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே… 23 ஆண்டுகளைக் கடந்தது பாலாவின் பிதாமகன் படம்!

23 Years Of Pithamagan Movie | தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநரின் படம் என்றால் பார்ப்பதற்கு தயக்கம் காட்டும் ரசிகர்கள் என்றால் அது பாலாவின் படம் தான். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பார்வையாளர்களை பதறவைக்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே… 23 ஆண்டுகளைக் கடந்தது பாலாவின் பிதாமகன் படம்!
பிதாமகன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 15:17 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமான கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பாலா (Director Bala). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பார்க்கும் பார்வையாளர்களின் மனதை கணக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களிடையே பொதுவான ஒரு கருத்து இருக்கும். நமது வாழ்க்கை அப்படி எல்லாம் இருக்க அது என்ன சினிமாவா என்று. அப்படி கூற காரணம் என்ன என்றால் நமது வாழ்க்கையில் சினிமாவைப் போல ஹேப்பி எண்டிங் என்பது இருப்பது கிடையாது என்பதே ஆகும். ஆனால் ஒரு படத்தில் எவ்வளவு கஷ்டமான சூழல் இருந்தாலும் படம் முடியும் போது அது அனைத்தும் தீர்ந்தும் மகிழ்ச்சியாக முடிவது போலவே காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலாவின் படங்கள் அப்படி ஒருபோதும் இருந்தது இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

அப்படி இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிதாமகன். ஆக்‌ஷன் க்ரைம் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகளைக் கடந்தது பாலாவின் பிதாமகன் படம்:

இந்தப் படத்தில் ஜெயிலில் சந்திக்கின்றனர் சூர்யா – விக்ரம். இதில் விக்ரம் மிகவும் முரட்டுதனமான மனிதனாக இருக்கிறார். அவர் சூர்யாவிற்கு மட்டுமே கட்டுப்படும் நபராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வில்லன்களால் சூர்யா கொல்லப்படும் நிலையில் அவர்களை விக்ரம் எப்படி பழிவாங்குகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. மிகவும் மகிழ்ச்சியாக காமெடியாக தொடங்கும் இந்தப் படம் மிகவும் சோகமான முடிவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… எனது முந்தைய படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி – சீன் பட இயக்குநர் பேச்சு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நலம் நலமறிய ஆவல், தஞ்சாவூரு மண்ணு எடுத்து… சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

Follow Us