AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்… ஜெயிலர் 2 படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சசிக்குமார்!

Sasikumar talks about Jailer 2 movie | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சசிகுமார் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்… ஜெயிலர் 2 படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சசிக்குமார்!
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 14:47 PM IST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 வெளியாகி தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான இந்த ஜெயிலர் 2 படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் உட்பட பல நடிகர்கள் புதிதாக இணைந்து நடித்து இருந்தது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி ஜெயிலர் 2 படத்தில் மூர்த்தி என்ற கதாப்பாத்திரம் தற்போது இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் ஜெயிலர் 2 படத்தில் இந்த மூர்த்தியின் கதாப்பாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜெயிலர் 2 மற்றும் மூர்த்தி கதாப்பாத்திரம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சசிக்குமார்:

அதன்படி சசிகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான். ஜெயிலர் 2 படத்திற்காக நெல்சன் திலீப்குமார் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜெயிலர் 2’ குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, புதிய மைல்கற்களை உருவாக்கட்டும. எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் என்று சசிகுமார் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கை மார்பில் காயம்.. பாலிவுட் நடிகர் மீது துப்பாக்கிச்சூடு.. வெளியானது புகைப்படம்!

சசிகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

Follow Us