தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் 2… படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!
Jailer 2 Movie New Poster | தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக ஜெயிலர் 2 திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா, ரித்விக், ஜதின் சர்னா, ஹக்கீம் ஷாஜகான், அண்ணா ராஜன், மேகனா ராஜ், நமோ நாராயணா, பகவதி பெருமாள், கோட்டயம் நசீர், சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஜார்ன் சுர்ராவ், ஜாபர் சாதிக், பதம் குமார், ஷீலா ராஜ்குமார், பி.எல்.தேனப்பன், ராகவ், ராஜேஷ் சர்மா, பானி ஜே, அபேக்ஷா போர்வால், எடின் ரோஸ்,
ராமச்சந்திரன் துரைராஜ், தமிழ் மற்றும் சரவண வேல் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்:
இது மட்டும் இன்றி நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன்,
ஜாக்கி ஷெராஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Pure Mass!🔥 MVP and his squad are bringing the thunder to theatres!⚡
#Jailer2IndustryBlockbuster@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
— Sun Pictures (@sunpictures) October 18, 2026
Also Read… எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 2-வது முறை ஜெயிலர் 2 படம் பார்த்த ராகவா லாரன்ஸ் – வைரலாகும் போஸ்ட்