பிக்பாஸில் முனியம்மாவின் செயலை கண்டித்த விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலிந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி இன்று பேசுகிறார். அதில் முனியம்மாவின் செயல் குறித்து அவர் கண்டித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் தற்போது மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 6-வது வாரம் முடிந்து 7-வது வாரம் தொடங்க உள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தற்போது 6-வது வாரம் தொடங்கியதில் இருந்து இரண்டு டாஸ்குகள் வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் டைமண்ட் ஹீஸ்ட்டில் டிடிஎஃப் வாசன் விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது. இதனை நேற்றைய எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி டிடிஎஃப் வாசனின் விளையாட்டை பாராட்டி அவருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸையும் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முழுவதும் பாராட்டுகள் மட்டுமே எபிசோடில் நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று கடந்த 6-வது வாரம் நடைப்பெற்ற நிகழ்வுகளில் என்ன எல்லாம் பிரச்சனை என்பதை விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசி வருகிறார். அதன்படி முதலில் எதிரணியினர் அனைவரையும் நிற்க வைத்து கேள்விகளை எழுப்பியது வீடியோவாக வெளியாகி இருந்தது.




பிக்பாஸில் முனியம்மாவின் செயலை கண்டித்த விஜய் சேதுபதி:
இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரம் பிக்பாஸில் ஜெயிலில் அடைக்கப்பட்ட முனியம்மா தண்டனை காலம் முடியும் முன்பே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவர் அப்படி செய்தது குறித்தும் லீடரான அன்சர் சரியான முடிவை எடுக்கவில்லை என்றும் விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தேவாவின் மறைவு – இசைப் பணிகளை நிறுத்திய இளையராஜா – வெளியான தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day42 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/qvtQsWNeIT
— Vijay Television (@vijaytelevision) October 18, 2026
Also Read… Rajinikanth: சொக்கத் தங்கம்.. மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ!