தேவாவின் மறைவு – இசைப் பணிகளை நிறுத்திய இளையராஜா – வெளியான தகவல்
Ilaiyaraaja Grieves Deva Loss : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா உடல் நலக்குறைவால் அக்டோபர் 17, 2026 இன்று காலமானார். தேவாவின் மறைவையொட்டி தனது இசைப் பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா நிறுத்தியுள்ளதாகவும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா உடல் நலக்குறைவால் அக்டோபர் 17, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 76. ஒரு பக்கம் இளையராஜா (Ilaiyaraaja), மற்றொரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் என கோலோச்சிய தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான பாடல்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் தேவா. தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்ற பல நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தேவாவின் மறைவு – இசைப் பணிகளை நிறுத்திய இளையராஜா
இந்த நிலையில் அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு




இந்த நிலையில் தமிழின் முன்னணி இசையமைப்பாளரான தேவாவின் மறைவையொட்டி தனது இசைப் பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேவாவின் உடலுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் முதல்வர் விஜய் தனது இரங்கல் பதிவில், தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.
கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பிக்பாஸில் டிடிஎஃப் வாசனின் கேம் ப்ளே… கோட்டைவிட்ட போட்டியாளர்கள் – வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ
மேலும் மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை மதியம் 1 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.