Deva: தேனிசை தென்றால் தேவாவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!
Devas Demise: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, பான் இந்திய அளவிற்கு பிரபலமானவர்தான் தேவா (76). இவர் இன்று (17/10/2026) உடல்நல குறைவின் காரணமாக காலமானார். அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு தமிழ் பிரபலங்கள் தங்களின் எக்ஸ் பதிவுகளை பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருந்துவருபவர் தேவா (Deva). இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1986ம் ஆண்டு முதல் தனது இசை பயணத்தை தொடங்கியிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முதல் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) வரை பெல்வேறு உச்ச நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இன்றுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தின் டைட்டில் கார்ட்-டில் கூட இவரின் இசையே இடம்பெற்றிருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிக பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவந்தவர். இவர் தமிழ் மற்றும் மல்லாமல் பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைப்பாளராக குறிப்பிடத்தக்கது.
அந்த விதத்தில் இசையமைப்பார் தேவா (76) இன்று (17/10/2026) உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரின் மறைவு திடீர் மறைவு தமிழ் சினிமாவில் அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார்கள்.




இதையும் படிங்க: இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்!
இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 17, 2026
அந்த பதிவில் கமல்ஹாசன், அன்பு சகோதரர் தேவாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியை அளிப்பதாகவும், அவரின் உற்சாகம், துறுதுறு நகைச்சுவையான சிரிப்பை இயல்பாக கொண்டவர் என்றும், சண்முகி, பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்களுக்கு இசையமைத்தது குறித்தும் நினைவு கூர்ந்திருந்தார்.
தேவாவின் மறைவுக்கு விஜய் சேதுபதி வெளியிட்ட இரங்கல் பதிவு:
தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவா சார் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும்.
ஆழ்ந்த இரங்கல் 🙏🏽 https://t.co/L4S1mTVVl1
— VijaySethupathi (@VijaySethuOffl) October 17, 2026
இந்த பதிவில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மிகவும் வேதனையை அளிப்பதாகவும், அவரது இசை, பாடல் என்றென்றும் நம் நினைவில் வாழும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாடகி சின்மயி இசையமைப்பாளர் தேவாவுக்கு இரங்கல் தெரிவித்த பதிவு:
Just dont know how to process the passing of Deva Sir.
Huge loss. 💔
— Chinmayi Sripaada (@Chinmayi) October 17, 2026
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இசையமைப்பாளர் தேவாவுக்கு இரங்கல்:
Deeply saddened by the passing of #Deva sir, a true legend of Tamil cinema whose music has touched generations. Having had the blessing of working with him in Mookuthi Amman will always remain a cherished memory. His legacy will live on through his timeless music. Heartfelt condolences. 🙏
— RJ Balaji (@RJ_Balaji) October 17, 2026
இதையும் படிங்க: மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு
நடிகர் சிபி சத்யராஜ் இசையமைப்பாளர் தேவாவுக்கு இரங்கல் தெரிவித்த பதிவு:
Extremely saddened to hear the passing away of #Deva sir.A complete allrounder when it came to music be it songs or background score and several movies in the 90s and 2000s became super hits and blockbusters mainly for his music.A wonderful human being who was truly humble and was a delight for Directors and Producers and of course Lead actors loved him for the kind of Mass elevations he had given them!
A huge loss to the Film industry.
My sincere condolences to his family,friends,relatives and fans.
RIP dear sir🙏🏻🙏🏻🙏🏻#Thenisaithendral
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) October 17, 2026
நடிகர் ராமராஜன் இசையமைப்பாளர் தேவாவுக்கு இரங்கல் தெரிவித்த பதிவு:
#Deva தேனிசை தென்றல் தேவாவின் மறைவுக்கு நடிகரும் இயக்குநரும் முன்னாள் எம்பி யுமான ராமராஜன் அவர்களின் இரங்கல் அறிக்கை :- தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது. நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார் அவர்கள், அவரின் இசை பிடிப்புனாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா அவர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் “இயல் இசை நாடக மன்ற” தலைவராகவும் கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா சார் அவர்கள், அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்….
— Actor Ramarajan (@Raamaraajan) October 17, 2026
அந்த பதிவில் ராமராஜன், தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது என அவரின் வருத்தம் குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.