டிடிஃஎப் வாசன் எப்படியாச்சும் ரெட் கார்ட் வாங்கணும்.. மாஸ்டர் பிளான் போடும் முகேஷ் – என்ன நடக்குது பா?
TTF Vasan Red Card Plan: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் சர்வைவல் டாஸ்க் இந்த வராம நடந்த நிலையில், சண்டைகள் மற்றும் காமெடி என இந்த வாரமே அமர்க்களமாக இருந்தது. அந்த விதத்தில் டிடிஃஎப் வாசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், அவருக்கு ரெட் கார்ட் வாங்கி கொடுக்கவேண்டும் என முகேஷ் திட்டமிடுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. மொத்தம் தற்போது 16 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 2026 செப்டம்பர் 06ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், இன்றுடன் (24/10/026) கிட்டத்தட்ட 48 நாட்களாகியுள்ளது. இந்த போட்டியில் இந்த வாரத்தில் சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், சண்டைகள், நகைச்சுவை மற்றும் பழிவாங்கல் உள்ளிட்ட பல விஷயங்களுடன் இருந்தது. அந்த விதத்தில் இந்த டாஸ்கானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ப்ளூ டீம் இந்த டாஸ்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த விதத்தில் ரெட் டீமில் வாசன் மற்றும் மற்ற போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் தங்களின் தந்திரங்களையும் இந்த விளையாட்டில் உட்படுத்திவருகின்றனர்.
அந்த விதத்தில் கடந்த வாரமே டிடிஃஎப் வாசனுக்கு மக்கள் மற்றும் விஜய் சேதுபதி மத்தியில் பாராட்டு கிடைத்திருந்த நிலையில், இந்த வாரமும் அவருக்கு பிக் பாஸிடம் பாராட்டு கிடைத்தது. இந்நிலையில் அவரை ப்ளூ டீமில் உள்ள முகேஷ் மற்றும் மற்ற போட்டியாளர்கள் ரெட் கார்ட் வாங்க வைக்க திட்டமிட்டுவருகிறார்கள். அது குறித்து காணலாம்.




இதையும் படிங்க: நோ பாதுகாப்பு.. நோ விளம்பரம்.. சைலண்டாக ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்துச்சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிக் பாஸில் டிடிஃஎப் வாசன்-ஐ ரெட் கார்ட் வாங்கி கொடுக்க நினைக்கும் முகேஷ்:
இந்த சர்வைவல் டாஸ்கின்போது ஆரம்பத்திலே முகேஷ் மற்றும் டிடிஃஎப் வாசன் இருவருக்கும் இடையே மோதல் இருந்தது. இந்த மோதல் அடிதடி அளவிற்கு எல்லாம் செல்லவில்லை என்றாலும், ப்ளூ டீம் டிடிஃஎப் வாசன்-ஐ கீழே தள்ளவே நினைத்திருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தின் ஆரம்பத்திலிருந்தே டிடிஃஎப் வாசனுக்கு ரெட் கார்ட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என முகேஷ் திட்டமிட்ட நிலையில், வார இறுதியான நிலையில், அந்த திட்டத்தை தனது ப்ளூ டடீமிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முடிஞ்சத பாத்துக்கோ.. பிக் பாஸில் ப்ளூ டீமின் உணவை கண்முன்னே எடுத்த முனியம்மாள் – வைரலாகும் ப்ரோமோ!
இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. பிக் பாஸில் மக்களின் மனதை வென்று மற்றும் நல்லாடியாக விளையாடிவரும் டிடிஃஎப் வாசன்-ஐ போட்டியாளர்கள் வெளியேற்ற நினைக்கும் நிலையில், இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திவருகிறது.
டிடிஃஎப் வாசனுக்கு ரெட் கார்ட் வாங்கி கொடுக்க நினைப்பது குறித்து முகேஷ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
Bigg Boss saying “Love you, Vasan” seems to have triggered so many people..
#BiggBossTamil10 #BiggBossTamil
https://t.co/nzxBUlyLD3
— BiggBoss Posts (@BiggBoss_Posts) October 23, 2026
இந்த வீடியோவில் முகேஷ், எப்படியாவது டிடிஃஎப் வாசன்-க்கு ரெட் கார்ட் வாங்கி கொடுக்கவேண்டும். பிக் பாஸ் அவனுக்கு லவ் யு சொன்னது அவரின் வெற்றி என ஜேசன் கூறுவதுபோன்றும், அவரை பிக் பாஸ் நன்றாக காட்டுகிறார் என அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பேசிக்கொள்வது தொடர்பான பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் ப்ளூ அணியின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.