SJ Suryah: அவர் இல்லாமல் நான் இல்லை.. அஜித் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryah About Ajith: தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது நடிகராகவும் படங்களில் பணியாற்றிவருவருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், நடிகர் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah). சினிமாவில் சிறு சிறு வேடங்களில் இவர் நடிக்க தொடங்கியிருந்த நிலையில், பின் இயக்குநராகவேண்டும் என்ற ஆசை கொண்டவர். இவருக்கு இயக்குநராக முதல் படத்தின் வாய்ப்பை கொடுத்தவர் அஜித் குமார் (Ajith kumar). இவர், சிம்ரன் (Simran) மற்றும் ஜோதிகா (Jyothika) போன்ற நடிகர்களின் கூட்டணியில் வெளியான படம் வாலி (Vaalee). இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். இயக்குநராக இவர் இயக்கிய முதல் திரைப்படம் இதுதான். மேலும் தனது இரண்டாவது படமாக குஷி (Kushi) படத்தை இயக்கியிருந்தார்.
இதில் தளபதி விஜய் மற்றும் ஜோதிகா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து பல படங்களையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த எஸ்.ஜே.சூர்யா, அதில் அவர் அஜித்தை பற்றிய நெகிழ்ச்சியான விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!
நடிகர் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய எஸ்.ஜே.சூர்யா:
அந்த பேட்டியில் பேசியிருந்த எஸ்.ஜே.சூர்யா, “சினிமாவில் எனது தொடக்கம் அஜித் சாருடன்தான். தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்குமே தெரியும், அவர்தான் எனது முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தவர். இயக்குனராக முதல் வாய்ப்பை கொடுத்தவரும் அவர்தான். அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை. இப்போது நாள் எல்லாருமே மதிக்கத்தக்க நபராக இருக்கிறேன்.
இதையும் படிங்க: பான் இந்திய படம் என அழைக்க விரும்பவில்லை.. முதல் உரிமை தெலுங்கு தான் – நானி!
ஆனால் அப்போது நான் அவ்வாறு இருக்கமாட்டேன். என்ன பார்த்தாலும் மதிக்கும் நபராக இருக்காது. ஆனால் என்னை அந்த சமையத்திலும் மதித்து ஒரு இயக்குநராக அறிமுகம் செய்தவர் அஜித் சார்தான். அஜித் சாரே, என்னை கூப்பிட்டு, என்னை இயக்குனராக மதித்து முதல் வாய்ப்பை கொடுத்தவர் அவர்தான் என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
தனது புதிய திரைப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Rangana… https://t.co/GdAWHoW1B2 via @YouTube and in telugu https://t.co/oqz0j1WF8S …. SARDAR 2 Da Mr PARUTTHiiii (@Karthi_Offl ) kalakkurom thatti thookkurom 🔥🔥🔥Class,Mass Dir @Psmithran sir🫡🫡🫡🫡🫡mass…
— S J Suryah (@iam_SJSuryah) July 31, 2026
எஸ்.ஜே.சூர்யா தற்போது புதிய படங்களிலோ நடிகராக நடித்துவருகிறார். மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநராகவும் புது படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படம்தான் கில்லர். இதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.