வைல்கார்ட் போட்டியாளர் ஆனந்தியை கடுப்பேற்றும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று இரண்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் வைல்கார்ட் போட்டியாளர் ஆனந்தியின் செயலை மற்ற போட்டியாளர்கள் கிண்டலடித்த நிலையில் அவர் கடுப்பாகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வாரம் கேப்டனாக சாதிகா தேர்வானார். அவர் கேப்டனானதில் இருந்து தொடர்ந்து பல சிக்கல்கள் அவரைச் சுற்றியே நடந்து வந்தது. மேலும் போட்டியாளர் முனியம்மா இன்னசெண்டாக இருப்பது போல மற்றவர்களை காயப்படுத்தும் விதமாக பேசியதும் தொடர்ந்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே எரிச்சலை மூட்டும் விதமாக இருந்தது. இதன் காரணமாக முனியம்மா இரண்டு முறை பிக்பாஸ் வீட்டில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மற்றப் போட்டியாளர்களில் பலர் என்ன செய்கிறார்கள் என்றே கடந்த வாரம் முழுவதும் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது இரண்டாவது வாரமும் தொடங்கியது.
அந்த வகையில் இந்த இரண்டாவது வாரம் தொடங்கிய போதே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்கார்ட் போட்டியாளராக நடிகை ஆனந்தி உள்ளே நுழைந்தார். அவர் வீட்டிற்குள் வந்த முதல் நாளே பல கூச்சல்களும் குழப்பங்களும் தொடர்ந்து நடைப்பெற்று வருவது புரோமோ வீடியோவில் காணக் கிடைக்கின்றது.




வைல்கார்ட் போட்டியாளர் ஆனந்தியை கடுப்பேற்றும் போட்டியாளர்கள்:
அதன்படி இன்று வெளியான மூன்று புரோமோ வீடியோக்களில் முதலாவதாக வெளியான வீடியோவில் ஆனந்தி உள்ளே வருவது காட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது புரோமோ வீடியோக்களில் அவர் மற்ற போட்டியாளர்களிடையே வாக்குவாதத்தில் ஏற்படுவது காட்டப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மூன்றாவதாக வெளியான புரோமோ வீடியோவில் லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் ஆனந்தியின் செயலை மற்ற போட்டியாளர்கள் கிண்டலடிக்க அது அவரை அதிகமாக காயப்படுத்துகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரன்பீர் கபூரின் ராமாயணா படத்திலிருந்து வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day8 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/wIw6e05DPT
— Vijay Television (@vijaytelevision) September 14, 2026
Also Read… போட்டியாளர்களிடையே பாரபட்சம் காட்டும் விஜய் சேதுபதி – அதிருப்தியில் பார்வையாளர்கள்