இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாரா? வைரலாகும் தகவல்
Director And Actor Lokesh Kanagaraj | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அவரே நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் இயக்கும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ மற்றும் கூலி ஆகியப் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தொடர்ந்து இயக்குநராக பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான டிசி படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள படத்தின் பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிசியாக பணியாற்றி வருகிறார்.




இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாரா?
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அதன்படி லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் அவர் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையவுள்ளது. துப்பாக்கிகள் அல்லது போதைப்பொருள் பயன்பாடு இல்லாத படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. தணிக்கைக் குழுவிடமிருந்து இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
Also Read… அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி? நடிகை யோகலட்சுமி ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Lokesh’s next film after the huge success of #DC. #LokeshKanagaraj is set to play the lead role in his next film.
The movie is going to be very different from the films he has directed so far. It will reportedly be a film without guns or drugs.
There is even a possibility… pic.twitter.com/EMKZMZbZoi
— Movie Tamil (@_MovieTamil) September 11, 2026
Also Read… Mandaadi: மண்டாடி மாபெரும் ஹிட்… கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கிய படக்குழு!