கௌதம் கார்த்திக்கின் பிளடி பாலிடிக்ஸ் பட டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Bloody Politics Movie Teaser Update: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் கௌதம் ராம் கார்த்தி. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் உருவாகிவரும் நிலையில், அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் பிளடி பாலிடிக்ஸ். தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் கார்த்திக் (Karthik). இவர் தற்போது சினிமாவில் அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்களில் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவரின் மகனான கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik) சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கத்தில் இப்படம் வெளியான நிலையில், அதில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இதன் பிறகு இயக்குநர் தீனா ராகவன் (Dhina Raghavan) இயக்கத்தில் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் பிளடி பாலிடிக்ஸ் (Bloody Politics). இந்த படமானது அரசியல் பின்னணி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு பகிந்துள்ளது.




இதையும் படிங்க: டிசி பட மாபெரும் ஹிட்.. படக்குழுவினருக்கு உயர்ரக BMW காரை பரிசால் வழங்கிய கலாநிதிமாறன்!
கௌதம் ராம் கார்த்திக்கின் பிளடி பாலிடிக்ஸ் திரைப்படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்:
இயக்குநர் தீனா ராகவனின் இயக்கத்தில், கௌதம் ராம் கார்த்திக் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் பிளடி பாலிடிக்ஸ். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ச்சனா நேத்திருந் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பிக்பாஸ் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!
மேலும் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் மற்றும் செல்வராகவன் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை (12/09/2026) காலை 11 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிளடி பாலிடிக்ஸ் பட டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
“It’s a game of blood for bloody people.” 🩸💥
The most anticipated teaser of #BloodyPolitics is arriving tomorrow at 11 AM! 🕚🔥
Starring : @Gautham_Karthik
Written & Directed By @DhinaRaghavan
Produced by @ganeshkbabu@draftbygkb @selvaraghavan @Dir_Rajumurugan @SamCSmusic pic.twitter.com/Zw6Yys3lxx— Draft By GKB (@draftbyGKB) September 11, 2026
அரசியல் கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் கூறுகிறது.