மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த கௌதம் ராம் கார்த்திக் – வைரலாகும் வீடியோ
Gautham Ram Karthik: தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் நடிகர்கள் தங்களின் படங்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாரு உடல் எடையை குறைப்பதும், கூட்டுவதுமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக கௌதம் ராம் கார்த்திக் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களின் உடல் எடையை குறைப்பது மற்றும் ஏற்றுவது என அனைத்தையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அப்படி கடினமாக உழைக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் நடிகர்கள் விக்ரம், அஜித் மற்றும் சூர்யா உட்பட பல நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் தங்களின் படங்களுக்கு ஏற்றவாறு உடல் எடையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தனது மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன போது ஒல்லியான தேகத்துடனே இருந்த நிலையில் அடுத்தடுத்தப் படங்களில் உடல் எடையில் மாற்றக் காமித்து வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடித்து உள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கடின உடற்பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




9 மாத உழைப்பு… கௌதம் ராம் கார்த்திக்கின் உடை எடை குறைப்பு வீடியோ:
கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ஒன்பது மாத கால ரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர். தடைகளைத் தாண்டி முன்னேறுதல், ஆசைகளை அடக்குதல், தொடர்ச்சியைப் பின்தொடர்தல் மற்றும் பழைய காயங்களைக் கடந்து வருதல். எனது பயிற்சியாளர் தினேஷின் உதவியுடன் ‘மிஸ்டர்.எக்ஸ்’ படத்திற்காகத் தயாரானது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பயணங்களில் ஒன்றாகும். இந்தப் பாத்திரத்தை என் மீது நம்பிக்கை வைத்த எனது இயக்குநரும் அருமை நண்பருமான மனு ஆனந்திற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று அந்தப் பதிவில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Also Read… புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு!
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
9 months of blood, sweat and tears, pushing through limitations, resisting cravings, chasing consistency and overcoming old injuries.
With the help of my trainer Dinesh preparing for #Mr.X has been one of the greatest transformative journeys of my life.
Forever grateful to my… pic.twitter.com/EIqDEixxHB— Gautham Ram Karthik (@Gautham_Karthik) April 14, 2026
Also Read… ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்