AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: டிராகன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சாய் அபயங்கர்.. ஹீரோவா? இசையமைப்பாளரா?

Sai Abhyankkar New Project: தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பு இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் சாய் அபயங்கர். இவர் சூர்யா முதல் அல்லு அர்ஜுன் வரை பல உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அந்த வகையில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் புது படத்திற்காக இவர் கைகோர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sai Abhyankkar: டிராகன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சாய் அபயங்கர்.. ஹீரோவா? இசையமைப்பாளரா?
சாய் அபயங்கர் புதிய திட்டம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Apr 2026 16:30 PM IST

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பில் இதுவரை மொத்தம் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிலும் இறுதியாக வெளியான டியூட் (Dude) படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக புது புது படங்களில் இவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் அட்லீ (Atlee) கூட்டணியில் உருவாகிவரும் ராக்கா திரைப்படம் (Raaka), சூர்யாவின் கருப்பு (Karuppu) என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவரு படங்களுக்கு மட்டும் இசையமைக்காமல், தனது இசையமைப்பில் ஆண்டிற்கு 2 ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுவருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியான பவழ மல்லி என்ற பாடல் (Pavazha Malli) இன்னும் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்துவருகிறது. இவ்வாறு தொடர்ந்து இசையில் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார்.

அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் சாய் அபயங்கர், எஸ்ஜிஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளாரா? அல்லது ஹீரோவாகவா? என கேள்விகள் எழும்பிவருகிறது.

இதையும் படிங்க: தலைவர் 173 படத்தை இயக்குவதில் இருந்து விலகினாரா சிபி சக்ரவர்த்தி – வைரலாகும் தகவல்

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருந்துவருவது ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம். இந்த நிறுவனமானது தளபதி விஜய்யின் கோட் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறது. அந்த வகையில் மேலும் அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிலம்பரசன் இணையவுள்ள STR51 படத்தையும் புதிதாக தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் தற்போது தங்களின் புதிய படத்தில் சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்டகலக்கி பாடல் – நெகிழ்ச்சியில் படக்குழு

இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சாய் அபயங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இது குறித்த பதிவு ஒன்றிற்கு, சாய் அபயங்கர் LOL என காமெடியான கருத்தை தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒருவேளை சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு இவர் இசையமைக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பல தமிழ் படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகிவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Follow Us