Kayadu Lohar: சாய் நைட் 2 மணிக்கு கால் பண்ணாரு.. பவழ மல்லி பாடலில் நடனமாட காரணம் இதுதான் – கயாடு லோஹர்!
Kayadu Lohar About Pavazha Malli Song Experience: இளம் கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் கயாடு லோஹர். இவர் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் பவழ மல்லி என்ற ஆல்பம் பாடலில் நடனமாடி ரசிகர்களையும் கவர்ந்தார். இந்நிலையில் அதில், நடனமாட காரணம் என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை கயாடு லோஹர் (kayadu Lohar) தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) டிராகன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இவர் அறிமுகமான நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் (Gv Prakash) மற்றும் அதர்வா (Athrvaa) போன்ற நடிகர்களுடன் ஜோடியாக புது படத்தில் நடித்துவருகிறார். அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் முதல் முதலாக வெளியாக தயாராகியுள்ள படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இப்படத்தில் இவர் மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு (Tovino Thomas) ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்ததாக நானி (Nani), நிவின் பாலி, துல்கர் சல்மான் (Dulquer Salmaan) போன்ற பிரபலன்களுடனும் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் வெளியான சாய் அபயங்கரின் (Sai Abhyankkar) பவழ மல்லி (Pavazha Malli) என்ற ஆல்பம் பாடலில் நடனமாடி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த வகையில் இதில் எவ்வாறு நடனமாட ஒப்புக்கொண்டார் மற்றும் சாய் அப்யங்கர் அணுகிய விதம் குறித்து கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: மிஸ்டர் எக்ஸ் படம் வெளியானது கௌதம் கலக்கிட்டாருனு எல்லாரும் சொல்வாங்க – ஆர்யா பேச்சு!
பவழ மல்லி பாடலில் நடனமாட ஒப்புக்கொண்டது குறித்து கயாடு லோஹர்:
அந்த நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், “பவழ மல்லி பாடல் உண்மையிலே எதிர்பாராத விதமாக அமைந்தது. ஒரு அதிகாலை 2 மணிக்கு சாய் அபயங்கரிடமிருந்து கால் வந்தது. அப்போது அவர் என்னிடம், “எங்களிடம் ஒரு அழகான பாடல் இருக்கு, அதில் நீங்கள் ஒருபகுதியாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். நிச்சயமாக இப்பாடல் மாபெரும் ஹிட்டடிக்கும் என நினைக்கிறன், அதற்கு நீங்கள்தான் சரியான நபர்” என்றார்.
இதையும் படிங்க: புதிய தொடரில் நடிக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. எந்த டிவி சீரியல் தெரியுமா?
அதை கேட்டதும் நான் ஒப்புக்கொண்டேன். மேலும் அந்த பாடலை அனுப்பக்கூறினேன். அதை கேட்டதும் எனக்கும் தெரிந்துவிட்டது இப்பாடல் ஹிட்டாகும் என, எனக்கும் நடனமாட பிடிக்கும். ஆனால் சிறந்த நடன கலைஞராக தெரியாது. பவழ மல்லி பாடலுக்கு 2 நாள் இரவு தூக்கம் இல்லாமல் ஒத்திகை பார்த்தேன். அதுவும் மிக வேடிக்கையாக இருந்தது” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பவழ மல்லி பாடல் நடிகை கயாடு லோஹர் வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
நடிகை கயாடு லோஹர் சென்சேஷனல் நடிகையாக தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் வெளியாக திறக்கியுள்ளது. அதில் முதல் படமாக டோவினோ தாமஸுடன் நடித்த பள்ளிச்சட்டம்பி படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.