AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய தொடரில் நடிக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. எந்த டிவி சீரியல் தெரியுமா?

Priyanka Nalkari New Tamil Serial:தமிழில் சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்துவந்தது ரோஜா. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் தற்போது புது சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அது எந்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

புதிய தொடரில் நடிக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. எந்த டிவி சீரியல் தெரியுமா?
பிரியங்கா நல்காரிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Apr 2026 21:12 PM IST

சின்னத்திரை மக்கள் மத்தியில் சீரியல் என்றாலே பெயர்போன தொலைக்காட்சி சன் டிவிதான் (Sun TV). இந்த சன் டிவியில் கிட்டத்தட்ட பல்வேறு சீரியல்கள் வெளியாகிவருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக சன் டிவியில் டிஆர்பியில் டாப் 5 இடத்தில் இடம்பெற்றிருந்த சீரியல்தான் ரோஜா (Roja Serial). இந்த சீரியல் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேலான எபிசோடுகள் வெளியாகியிருந்தது. இந்த் சீரியலில் நடிகை பிரியங்கா நல்காரி (Priyanka Nalkari) மற்றும் பிரிஸ்ன் இம்மானுவேல்ஸ் இருவருமே லீட் வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த சீரியலானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் சீசன் 1 மற்றும் சீசன் 2 என இரு சீசன்களாக இந்த தொடர் வெளியாகியிருந்தது. இந்த சீரியலின் மூலமாக மக்களிடையே மிகவும் நெருக்கமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது இவர் புது சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதையும் படிங்க: புகார் கொடுத்த படக்குழு.. ஜன நாயகன் படம் லீக் செய்தது யார்? சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

நடிகை பிரியங்கா நல்காரி ஒப்பந்தமான புது சீரியல் :

நடிகை பிரியங்கா நல்காரி, ரோஜா சீரியலுக்கு பிறகு மாரி மற்றும் சிங்கப்பெண்ணே போன்ற சீரியலலில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் சீரியல் மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் காஞ்சனா 3 படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தியேட்டரில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ்… நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா

இவ்வாறு சினிமா மற்றும் சீரியல்கள் போன்றவற்றை ஆர்வமாக இருக்கும் பிரியங்கா நல்காரி, புது சீரியலில் கமிட்டாகியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் (Kalaignar Tv serials) ஒளிபரப்பாகிவரும் கௌரி என்ற சீரியலில், மங்கா என்ற வேடத்தில் நடிப்பதற்காக இவர் கமிட்டாகியுள்ளாராம். தற்போது இது தொடர்பான விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@nalkarpriyanka)

இவர் எப்போதுமே சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துவருவது வழக்கமே. அந்த விதத்தில் இவர் மீண்டும் சீரியலில் நடிகையாக நடிக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

Follow Us