அய்யனார் துணை சீரியலில்.. சோழனாக நடிக்க அரவிந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Aravinth Seiju Aalary: விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ள சீரியல்தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் சோழன் என்ற வேடத்தில் நடிகர் அரவிந்த் செய்ஜூ நடித்துவருகிறார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்துவருபவது விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ, அதுபோல சீரியல்களும் பிரபலம். அந்த வகையில் இந்த விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) முன்னிலை வகிக்கும் சீரியலாக இருந்துவருவதுதான் அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியல் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் தின்தோறும் வெளியாகிவருகிறது. இந்த சீரியலை பிரியா தம்பி என்பவர் இயக்கிவருகிறார். இந்த சீரியலில் சின்னத்திரை புகழ்பெற்ற நடிகை மதுமிதா ஹிரன்னையா (Madhumitha Hirannaiah) நடித்துவருகிறார். இவருக்கு அடுத்ததாக இந்த சீரியலில் லீட் நடிகராக நடித்துவருபவர்தான் அரவிந்த் செய்ஜூ (Aravinth Seiju).
இவரை இந்த அய்யனார் துணை சீரியலில் “சோழன்” என்ற வேடத்தில், நடிகை மதுமிதாவின் கணவராக நடித்துள்ளார். இந்த சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் டாப் 3 இடத்தில் இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நடிப்பதற்கு நடிகர் அரவிந்த் செய்ஜூ, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?
சோழனாக நடிக்கும் நடிகர் அரவிந்த் செய்ஜூவின் ஒரு நாள் சம்பளம் :
இந்த அய்யனார் துணை சீரியலானது 5 அண்ணன் மற்றும் தம்பிகளின் கதையை மையமாக கொண்டுள்ளது. இதில் முதல் பெண்ணாக நுழையும் நடிகை மதுமிதாவை சுற்றியே இந்த சீரியல் அமைந்துள்ளது. அதில் மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்துவரும், நடிகர் அரவிந்த் ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா?. அய்யனார் துணை சீரியலில் நடிப்பதற்கு ஒருநாளைக்கு ரூ 20,000 சம்பளமாக பெருகிறாராம்.
இதையும் படிங்க: விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி.. முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் எது தெரியுமா?
இவர் தற்போது மேலும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில், தனது மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் சேர்ந்தே ஒருநாளைக்கு ரூ 50,000 வழங்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அய்யனார் துணை சீரியல் புகழ் அரவிந்த் செய்ஜூவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியில் இந்த அய்யனார் துணை சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணியளவில் ஒளிபரப்பாகிவருகிறது. விஜய் தொலைக்காட்ச்சியில் வெளியாகிவரும் டாப் 5 சீரியலிகளில் எப்போதுமே முதல் இரு இடங்களை இந்த சீரியல் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இந்த சீரியல் உள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது.